11th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம்
- டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். முன்னதாக, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
- தமிழ்நாடு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் பங்கேற்கும் முதல் ஜிஎஸ்டி கூட்டம் இதுவாகும்.
- ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மேலும் செயற்கை ஜரிகை நூல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதேபோல திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்.
- அமலாக்கத் துறை இயக்குனராக, மூத்த ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை பிரிவு அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா, 2018, நவ., 19ல் நியமிக்கப்பட்டார். இவருடைய இரண்டு ஆண்டு பணிக் காலம், 2020ல் முடிவதாக இருந்தது.
- அப்போது அவருடைய பணிக் காலம், 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021 செப்.,ல் அளித்த உத்தரவில், பணி நீட்டிப்பை ஏற்ற உச்ச நீதிமன்றம், இதற்கு மேல் பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, குறிப்பிட்டிருந்தது.
- இந்நிலையில், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., இயக்குனர்கள், வழக்கமான இரண்டாண்டு பணி நீட்டிப்பு காலத்துக்குப் பின், மேலும், மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில், 2021ல் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
- இதற்காக, மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம், டில்லி சிறப்பு போலீஸ் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு பெற்ற சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம், வரும், நவ., 18ல் முடிவடைய உள்ளது.
- இதை எதிர்த்து, காங்கிரசின் ரன்தீப் சுர்ஜேவாலா, ஜெயா தாக்குர், திரிணமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா, சாகேத் கோகலே உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- இந்த வழக்குகளை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. கடந்த, மே, 8ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமர்வு கூறியுள்ளதாவது:சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு அளித்தது சட்ட விரோதமாகும்.
- சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆய்வு நடந்து வருகிறது. இதனாலும், பணியை ஒப்படைக்க அவகாசம் அளிக்கும் வகையிலும், வரும், 31ம் தேதி வரை மட்டும் அவர் பணியாற்றலாம். அதே நேரத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு சட்டம், டில்லி சிறப்பு போலீஸ் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லும்.
- உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் சமீபத்திய புதுப்பிப்பை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியா உட்பட 25 நாடுகள் தங்களது உலகளாவிய உலகளாவிய வறுமை குறியீட்டு மதிப்புகளை 15 ஆண்டுகளில் பாதியாக குறைத்து, விரைவான முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாக ஐநா பாராட்டி உள்ளது.
- ஐநாவின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2005-06ம் ஆண்டிலிருந்து 2020-21ம் ஆண்டு வரை 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி உள்ளனர்.
- 2005-06ம் ஆண்டில் இந்தியாவில் 64.5 கோடி பல்வேறு பிரிவின் கீழ் வறுமையில் இருந்த நிலையில், 2015-16ல் இந்த எண்ணிக்கை 37 கோடியாக குறைக்கப்பட்டது. 2019-21ல் இது 23 கோடியாக சரிந்துள்ளது.
- 2005-06ம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 55.1 சதவீதம் பேர் வறுமையில் இருந்த நிலையில் 2020-21ல் 16.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- மேலும், ஊட்டச்சத்து கிடைக்காத ஏழைகள் எண்ணிக்கை 2005-06ல் 44.3 சதவீதத்தில் இருந்து தற்போது 11.8 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு 4.5 சதவீதத்தில் இருநச்து 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- சமையல் எரிபொருள் கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகவும், சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 5.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறாதவர்கள் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகவும், மின்சார வசதி கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 29 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், வீட்டுவசதி கிடைக்கப் பெறாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்திலிருந்து 13.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
- வரும் 2030ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு, சராசரி வருமான, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, பாலின சமத்துவம் போன்றவற்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் சிக்கல் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.
- காரணம், 2030ம் ஆண்டில் உலகளவில் 57.5 கோடி கடுமையான வறுமையில் தொடர்ந்து இருப்பார்கள் என்றும், 8.4 கோடி குழந்தைகள் பள்ளி செல்லா நிலையில் நீடிப்பார்கள் என்றும் ஐநா மதிப்பிட்டுள்ளது. பாலின சமத்துவம் அடைய இன்னும் 268 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறி உள்ளது.
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு, பொதுமக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன.
- இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன், செங்கல், சில்லு வட்டம், கிண்ணம், சுடுமண்ணால் ஆன கருப்பு, சிவப்பு நிற பானை, கூம்பு,வட்ட வடிவ அகல் விளக்கு உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொல்லியல்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன.
- வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
- அயர்லாந்தில் உள்ள லிமெரிக் நகரில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் பார்த் சலுங்கே இறுதிப் போட்டியில் 7-3 என்ற கணக்கில் கொரியாவின் சாங் இன்ஜுனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வெற்றார்.
- இதன் மூலம் இளையோருக்கான உலக வில்வித்தையில் ரீகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பார்த் சலுங்கே.
- 21 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் பாஜா கவுர் 7-1 என்ற கணக்கில் சீன தைபேவின் சு ஷின் யுவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
- இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா 6 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் பட்டியலில் 2-வது இடம் பிடித்து நிறைவு செய்தது. கொரியா 6 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
- இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த 7-வது ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) நிறைவடைந்தது. இப்பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தில்லி, காமோர்தா, சக்தி ஆகியவையும் ஜப்பான் நாட்டின் கடற்படைக் கப்பல் சமிதார் ஆகியவையும் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
- மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், கப்பல்கள், அதில் உள்ள ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், கடல்சார் ரோந்து விமானம், நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டன.