10th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
500 பெண்கள் ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம்: திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
- கடந்த 2021 மே 7-ம் தேதி இந்த அரசுபொறுப்பேற்றது முதல் 2023 மே 31-ம் தேதி வரை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 13.80 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 11.82 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.914.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி,திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரியத்தில் தற்போது 1.74 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- இந்த வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், 500 பெண்ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
- இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக மானியத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 141 பயனாளிகளில் 10 பேருக்குபுதிய ஆட்டோக்களுக்கான பதிவுசான்று, அனுமதி ஆவணங்களை முதல்வர் வழங்கினார்.
- கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மின்டன் இறுதி ஆட்டம் நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லஷ்யா சென்(21வயது, 19வது ரேங்க்), சீன வீரர் ஷி ஃபெங் லீ(23வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
- சீன வீரர் லீயின் சவாலை சமாளித்த சென் அசத்தலாக விளையாடிய 21-18, 21-20 என்ற புள்ளிக்கணக்கில் இறுதி ஆட்டத்தை 2-0 என்ற நேர் செட்களில் வென்ற சென் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
- மகளிர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்துவை வீழ்த்திய ஜப்பானின் அகனே யாமகுச்சி, இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சோனோக் இன்டனானை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். பி.வி.சிந்துக்கு 3வது இடம் கிடைத்தது.
- தேசிய மீன் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் மாநாடு மற்றும் கண்காட்சியை ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா நேற்று தொடங்கி வைத்தார்.
- இதில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது