3rd JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து
- ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று முன்தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்குரயில், பெங்களூரு யஷ்வந்த்பூர்-ஹவுரா ரயில்கள் மோதிக் கொண்டதில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- இந்நிலையில், இந்த பயங்கர விபத்து எப்படி நடந்தது என்ற விவரம் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- கோரமண்டல் ரயில் பாலசோர் நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பாஹாநாகாவுக்கு முன்பாக உள்ள வனப்பகுதி அருகே ஆளில்லாத சிக்னலில் பச்சை சிக்னல் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆனால் சில விநாடிகளிலேயே அந்த பச்சை சிக்னல், சிகப்பு சிக்னலாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரயில் இன்ஜினில் இருக்கும் டிரைவர் பார்க்கும் போது அதில் பச்சை சிக்னல் இருந்துள்ளது.
- இதனால்தான் அவர் ரயிலை வேகமாக இயக்கி முன்னே சென்றிருக்கிறார். அப்போதுதான் எதிரே வந்த சரக்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.
- அதாவது, அந்த சிக்னலில் சிகப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி இருப்பார். அந்த நேரத்தில் சரக்கு ரயில் வேறு தண்டவாளத்தில் சென்றிருக்கும்.
- ஆனால் சில நொடிகள் காட்டப்பட்ட பச்சை சிக்னலால்தான் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இந்திய கடற்படைக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 02 ஜூன் 23 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.
- பயிற்சி, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டுப் படிப்புகள், சிறப்பு மையம் (கடற்சார் பொறியியல்), ஐஎன்எஸ் சிவாஜி, லோனாவாலா மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் குழுக்களின் கள அளவிலான சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான செயல்முறையை உள்ளடக்கியதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மெட்டீரியல் பிரிவின் தலைவர் வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாலினி வி ஷங்கர், ஐஏஎஸ் (ஓய்வு) ஆகியோர் கையெழுத்திட்டனர்.