19th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
'ரா' உளவு அமைப்பின் தலைவராக ரவி சின்ஹா நியமனம்
- உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ரகசியத் தகவல்களை திரட்டி, நம் நாட்டிற்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் ரா உளவு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
- தற்போது, இதன் தலைவராக பதவி வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
- இதையடுத்து, புதிய தலைவராக, 1988ம் ஆண்டின் சத்தீஸ்கர் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவி சின்ஹாவை, 59, நியமித்து நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
- ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த இவர், தற்போது செயல் பிரிவு தலைவராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- சீனாவின் வுக்ஸியில் ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், இந்தியா சார்பில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64 வது சுற்றில் பவானி தேவி பை பெற்றார்.
- இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில் பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார்.
- இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி பவானி தேவி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
- ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான மூன்றாவது நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது.
- நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம் கூட்டம் உதய்பூரிலும் நடைபெற்ற நிலையில், 3வது கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி உள்ளது.
- இதில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துவது குறித்தும், சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
- பசுமை மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான தனியார் மூலதனத்தை ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் நிதிக் கருவிகள் ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- முதல் நாளின் தொடக்க அமர்வில் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்தியத் தலைவர் கீது ஜோஷி, பொருளாதார விவகாரத் துறையைச் சேர்ந்த சாந்தினி ரெய்னா ஆகியோர் உரையாற்றினர். இந்த 3 நாள் கூட்டத்தில் சீனா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
- மங்கோலியாவில் எக்ஸ் கான் க்விஸ்ட் 2023 என்ற 20-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கியது. மங்கோலியாவில் இப்பயிற்சியை அந்நாட்டு அதிபர் திரு உக்நாகின் குரேல்சுக் தொடங்கிவைத்தார்.
- மங்கோலிய ராணுவப் படை, அமெரிக்க ராணுவ பசிபிக் படை ஆகியவை இணைந்து இப்பயிற்சியை நடத்துகின்றன. இப்பயிற்சியில் கார்வார் ரைஃபிள்ஸ் பிரிவிலிருந்து இந்திய ராணுவக் குழு பங்கேற்றுள்ளது.
- 14 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, ஐநா அமைதிப்படைக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
- ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்துவது, அமைதி நடவடிக்கைகளை பராமரிக்கும் திறன் எதிர்காலத்தில் ஐநா பாதுகாப்புப் படையில் இடம் பெறுவோரைத் தயார் படுத்துதல் ஆகியவை இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற உள்ளன.
- இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், கலவையான கற்பித்தல் பின்னணியில் அடிப்படையான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதிசெய்வது குறித்த கருத்தரங்கு புனேயில் சாவித்திரி பாய் புலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
- இந்தக் கருத்தரங்கு ஜி20 நான்காவது கல்விப் பணிக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
- மத்திய கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங் இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
- மகாராஷ்டிரா மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சர் திரு சந்திரகாந்த் பாட்டில் உட்பட ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச அமைப்புகளின் அலுவலர்களும், மத்திய மற்றும் மாநில கல்வித்துறைகளின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
- இந்தக் கருத்தரங்கையொட்டி கல்வியில் சிறந்த நடைமுறைகள், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, டிஜிட்டல் முன்முயற்சிகள், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் பலவகை ஊடகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- யுனிசெஃப், என்சிஇஆர்டி, நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்திய அறிவு முறைகள் பிரிவு (ஐகேஎஸ்), ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உட்பட 100-க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை இந்தக் கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தன. ஜூன் 17 அன்று தொடங்கிய இந்தக் கண்காட்சி (ஜூன் 19 தவிர) ஜூன் 22 வரை நடைபெறும்.
- கோவாவில் 4-வது சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் 2 நிகழ்வுகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக், கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ரோகன் காண்டே, சுற்றலாத்துறைச் செயலாளர் திருமதி வித்யாவதி ஆகியோர் பங்கேற்றனர்.
- இக்கூட்டத்தில் நீடித்த மற்றும் பொறுப்பான பயணத்திற்காக கப்பல் சுற்றுலா மாதிரியை உருவாக்குதல் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது.