Type Here to Get Search Results !

18th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தோனேசியா ஓபன்: சாத்விக் - சிராஜ் ஜோடி சாம்பியன்
  • இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை பைனலில் மலேசியாவின் ஆரோன் சியா - சோஹ் வூய் யிகா ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய ஜோடி 21-17, 21-18 என்ற நேர் செட்களில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
  • ஆரோன் – யிகா ஜோடியுடன் 11 முறை மோதியதில் சாத்விக் – சிராக் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 1000 அந்தஸ்து பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய இணை என்ற பெருமையும் சாதனையும் சாத்விக் – சிராஜ் வசமாகி உள்ளது.
கோவை நகர கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது
  • டெல்லியில், தேசிய நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கூட்டுறவு வங்கியாக செயல்பட்டு வருவதற்கான முதலாவது தேசிய விருதும், கூட்டுறவு வங்கிகள் வரலாற்றில் முதன்முறையாக 2.74 சதவீதம் செயல்படாத சொத்துக்கள் மேலாண்மைக்கான இரண்டாவது தேசிய விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முதுமக்கள் தாழி
  • தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். 
  • இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
  • இந்த நிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியமூட்டும் விதமாக நான்கு வளையங்களைக் கொண்ட இந்த வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 
  • இந்த முதுமக்கள் தாழி 30 செ.மீ அகலம் மற்றும் 58 செ.மீஉயரம் கொண்டது. இது வளைந்த மற்றும் விரல்தடம் பதித்த வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இச்சிறிய அளவிலான ஈமத்தாழியில் இரண்டு மூன்று ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது. 
  • இதில் கண்டுபிடிக்கப்பட்ட வளையல்களானது 3.5 செ.மீ விட்டமும், 0.2 செ.மீ கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டு அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் நான்கு வளையங்களைக் கொண்டதாக உள்ளது. 
  • இந்த வளையல் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள் ஆகும். ஈமத்தாழி, மண்டை ஓடு, வளையல்கள் ஆகியவற்றின் அளவைக் கொண்டு இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தையுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
  • மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. 
  • ஈமத்தாழியின் உள்ளே மண்டை ஓடு, கைகால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்தது. இதன் உள்ளே நான்கு ஈமப்பானைகள், 22 செ.மீ நீளமுள்ள இரும்பாலான குறுவாள், 5.5செ.மீ விட்டமும், 0.5செ.மீ கன அளவும், 24 கிராம் எடையும் கொண்ட இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel