Type Here to Get Search Results !

12th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உடாய் அமைப்பின் சி.இ.ஓ.வாக அமித் அகர்வால் நியமனம், தேசிய தேர்வு முகமை இயக்குனரானார் சுபோத் குமார்
  • உடாய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமித் அகர்வாலும், தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனராக சுபோத் குமார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இவர்கள் இருவரும் சட்டீஸ்கர் மாநில அதிகாரிகள் பிரிவை சேர்ந்தவர்களாவர். தற்போது, 1993ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அகர்வால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். 
  • அதே போல், 1997ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த சிங் தற்போது நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது வினியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது வினியோகம் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றுகிறார். 
  • சிங்கின் பதவிக்கு தற்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கூடுதல் செயலாராக பணியாற்றும் ரிச்சா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ஒன்றிய தகவல் ஆணையத்தின் செயலாளராக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் கூடுதல் செயலராக பணியாற்றும் ராஷ்மி சவுதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் தோட்டக்கலையை மேம்படுத்த 130 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், இந்தியாவும் கையெழுத்தி்ட்டுள்ளன
  • இமாச்சலப்பிரதேசத்தில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேளாண் உற்பத்தித் திறனைக் கூடுதலாக்கவும், பாசன வசதியை மேம்படுத்தவும் தோட்டக்கலை வேளாண் வணிகத்தை ஊக்கப்படுத்தவும் 130 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும், கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அதன் இந்தியாவுக்கான இயக்குநர் திரு டேக்கோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.
இயல்பான மாதாந்திர நிதிப்பகி்ர்வு ரூ.59,140 கோடி என்பதற்கு பதிலாக மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது
  • இயல்பான மாதாந்திர நிதிப்பகி்ர்வு ரூ.59,140 கோடி என்பதற்குப் பதிலாக மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு 2023 ஜூன் 12 அன்று விடுவித்துள்ளது.
  • மாநிலங்கள் அவற்றின் மூலதனச்செலவை விரைவுபடுத்தவும், மேம்பாடு மற்றும் செலவுகளுக்கு நிதி வழங்கவும், முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கச்செய்யவும் ஏதுவாக 2023 ஜூன் மாதத்தின் இயல்பான தவணை நிலுவையோடு கூடுதலாக ஒரு தவணை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் இருந்து 2023 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.4825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel