10th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3
- சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா 232-234 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 235-238 என்ற கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்தது.
- மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.
- ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் பார்த் சலுங்கே 2-6 என்ற கணக்கில் சீனாவின் ஜியாங்ஸுவிடம் தோல்வி அடைந்து வெளிப் பதக்கம் பெற்றார்.
- மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருமா பிஸ்வாஸ் 2-6 என்ற கணக்கில் சீனாவின் அன் குயிஸுவானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரில் இந்தியா 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5-வது இடம் பிடித்து நிறைவு செய்தது.
- பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முகோவாவுடன் (26 வயது, 43வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் (22 வயது, போலந்து), 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தொடர்ந்து 2வது முறையாகவும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3வது முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்தார்.
- மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. ஸ்வியாடெக் வென்ற 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. அவர் பிரெஞ்ச் ஓபனில் 3 (2020, 2022, 2023), யுஎஸ் ஓபனில் (2022) ஒரு முறை பட்டம் வென்றுள்ளார்.
- மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
- சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும்.
- மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திருஅமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்