7th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
- இதையடுத்து, புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் வகையில், ஆதிச்சநல்லூர் அதனை சுற்றியுள்ள திருக்கோளூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
- கடந்த பிப்ரவரி மாதம் 6 - ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வில், பண்டைய கால மக்கள் பயன்படுத்திய, பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், சுடுமண் உருவங்கள், செம்பு காசுகள், மெருகேற்றப்பட்ட சிவப்பு, கருப்பு நிறத்திலான பானை உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்புத் துறைகளின் 'ஈட் ரைட் சேலஞ்ச்' செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டுதோறும் விருது வழங்குவது வழக்கம்.
- இந்நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை, உணவுப் பாதுகாப்பு குறியீடு மூலம் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மதிப்பீடு செய்தது. இதற்காக, 'ஈட் ரைட் சேலஞ்ச்' என்ற போட்டியில் நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பங்கேற்றன.
- இதில், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல், சாலையோர தள்ளு வண்டி கடைகளுக்கு 'கிளீன் ஸ்ட்ரீட் ஃபுட்' சான்றிதழ் வழங்குதல், கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம், அன்னதானத்தை பரிசோதித்து தரச் சான்றிதழ் வழங்குதல், அபராதம் விதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு போட்டி நடத்தப்பட்டது.
- அதில், 177 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை 7-ம் இடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளது. இப்போட்டியில், 200-க்கு 196 மதிப்பெண்கள் பெற்று தேசிய மற்றும் மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
- தொடர்ந்து, 175 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் மதுரை மாவட்டம் 8-வது இடமும், மாநில அளவில் 3-வது இடமும் பிடித்துள்ளது. டெல்லியில் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
- உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
- இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை நீட்டிக்கும் முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஏப்ரல் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
- உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகள் இனி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணிபுரியும் பொறியியல் பிரிவிலும் புது தில்லியில் உள்ள உள்நாட்டு ராணுவ தலைமையகத்திலும் தேவைகளுக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள்.
- இந்த முற்போக்கான கொள்கை நடவடிக்கை, பெண் அதிகாரிகளின் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதோடு, அவர்களின் தொழில்முறை தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இப்போது பெண் ராணுவ அதிகாரிகளும், ஆண் அதிகாரிகளைப் போன்று சவாலான பயிற்சிகளையும், பணிகளையும் மேற்கொள்வர்.