Type Here to Get Search Results !

6th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்
  • மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.
  • தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு எம்எஸ்எஸ் கெலினா (MSS GALENA) என்ற கப்பல், கட்டுமானம் மற்றும் ஜவுளிப் பொருட்களைக் கொண்ட 270 கண்டெய்னர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இரு நாடுகளின் உறவுகள் மேம்படுவதற்கு இந்த கப்பல் சேவை உதவும்.
  • இந்த கப்பலானது மாதத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது. இந்த கப்பல் 421 சரக்கு பெட்டகங்கள் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. வெள்ளிக்கிழமை புறப்பட்ட சரக்கு கப்பல், ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தைச் சென்றடையும். இந்திய கப்பல் கழகத்தால் இந்த சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை சிறப்பு மலர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
  • தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை வெளியிட்டார்.
  • இதைத்தொடர்ந்து முதல்வர் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்பு காணொலி குறுந்தகடு ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார். 
  • மேலும், தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
  • இந்த கண்காட்சியில், அரசு கொரோனா காலகட்டத்தில் பதவியேற்ற நாள் முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டதோடு, இனிவரும் காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது, மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
  • தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை சென்னை, கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி 14.5.2023 வரை நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
3 ஆம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டப்பட்டார்
  • இங்கிலாந்து நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் எலிசபெத் -II. இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார்.
  • இவரது மறைவை அடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா இன்று (மே மாதம் 6 ஆம் தேதி) நடைபெற்றது.
  • இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
  • இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து அரசர்கள் 700 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாரானது.
  • இந்த நிலையில், இன்று இவ்விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், முடிசூட்டில் விழாவிற்காக அரண்மனையில் இருந்து சார்லஸ், அவரது மனைவி கமீலா, ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு சென்றனர். 
  • பாரம்பரிய முறைப்படி, மன்னர் 3 ஆம் சார்லஸ் கையில் செங்கோல் தடி ஏந்தி அமர்ந்தார். இதையடுத்து, மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, ஆசிர்வாதத்துடன், புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்பட்டது.
உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
  • உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக, உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • அதன்படி, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த தனி வாரியம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
  • மேலும், மற்ற நலவாரியங்களை போலவே உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திலும் இலவசமாக பதிவு செய்யலாம் என்றும் உப்பளத் தொழில் நல வாரிய உறுப்பினர்களும் இனி கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகையையும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel