Type Here to Get Search Results !

5th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


5th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

திண்டிவனம் சிப்காட்டில் ரூ.155 கோடியில் மருந்து பூங்கா - முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்
  • விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ.155 கோடி மதிப்பில், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட மருந்து பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, பெருங்குழும திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகிறது.
  • இத்திட்டத்துக்கு தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.51.56 கோடியும், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டு, பொது வசதி மையம், உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளன.
  • இப்பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் 6 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த மருத்துவப் பூங்கா திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • புத்தொழில் நிதி திட்டம்: புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைய தமிழக அரசால், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
  • இதன்படி, இந்தப் பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடன் வழங்க கடந்த நிதியாண்டில் ரூ.30 கோடியில் நிதியம் தொடங்கப்பட்டது. 
  • இந்த நிதிஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் இருந்து தகுதியான நடுவர் குழுவின் வாயிலாக 2 கட்டமாக 8 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • மேம்பட்ட உற்பத்தி, பொழுதுபோக்கு ஊடகம், கட்டிடவியல், செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், பழங்குடியினரால் தொடங்கப்பட்ட பசுமை எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு ரூ.9.75 கோடி பங்குமுதலீடு வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங் கினார்.
  • தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்கும் வகையில், தகுதியான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் ஆதார நிதியாக 'தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி - டேன்சீட்'திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிவருகிறது. இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன.
  • தற்போது டான்சீட் 4-வது பதிப்பின் 2-ம் கட்டமாக உற்பத்தி, நவீன கட்டிடவியல், இணைய பாதுகாப்பு, மாற்று திறனாளிகளுக்கான தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்து இயங்கும் 25 நிறுவனங்கள் புத்தொழில் ஆதார நிதியைப் பெற தேர்வு பெற்றுள்ளன.
  • அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.25 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங்கினார். 
கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்து விட்டது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
  • கொரோனா வைரஸ் தாக்கம் 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. 
  • உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.
  • தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து விட்டது. இதை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. 
  • எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு டிவிட் செய்துள்ளது.
டைமண்டு லீக் தடகளத்தில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
  • கத்தாரின் தோகாவில் நடக்கவுள்ள 2023ம் ஆண்டின் முதல் டைமண்டு லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் 88.67 மீ , ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் இரண்டாவது இடத்தில் செக் குடியரசின் ஜேக்கப் 88.63, மீ,) வெள்ளியும், கிரனடாவில் பீட்டர்ஸ் (85.88 மீ) வெண்கலமும் வென்றனர்.
தமிழகத்தில் 95 கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்.-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல்.அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான எச்.சி.எல். (சாமுடே)-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, மற்றும் எச்.சி.எல். அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் நேற்று(வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
  • எச்.சி.எல். சாமுடே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel