Type Here to Get Search Results !

2nd May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
  • சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • இந்தக் கூட்டத்தில், 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கேட்டர்பில்லர், மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் விமானப் படையின் தென்மண்டல தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்
  • ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் 01 மே 23 அன்று விமானப்படையின் தென் மண்டல தளபதியாக பொறுப்பேற்றார். 
  • கஜகூட்டம் சைனிக் பள்ளி மற்றும் நேஷனல் பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், இந்திய விமானப்படையில் 1986 ஜூன் 7 ந்தேதி நியமிக்கப்பட்டார். 
  • அவர் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் 5,400 மணி நேரத்திற்கும் மேல் பறந்துள்ளார். அவர் ஒரு தாக்குதல் ஹெலிகாப்டர் தலைவராகவும், பறக்கும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  • வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், செகந்திராபாத் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட்டில் எம்எம்எஸ் பட்டமும், புது தில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் எம் ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.
  • விமானப்படையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், இதற்கு முன்பு விமானப்படையின் கிழக்கு பிரிவில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக இருந்தார்.
  • ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகிய குடியரசு தலைவர் விருதுகளைப் பெற்றவராவார்.
த்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டம், நகர்ப்புறங்களின் துப்புரவு துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. 
  • திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 
  • அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, இணைச் செயலாளர் திருமிகு ரூபா மிஸ்ரா, ரைட்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் திரு ராகுல் மிதால் ஆகியோர் முன்னிலையில், இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையில் தொழில்நுட்ப உதவிக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி ரைட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு, நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு மூன்று ஆண்டு காலம் தொழில்நுட்ப உதவி வழங்கும். கழிவுநீர் மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு நடைமுறை உள்ளிட்ட துறைகளில் ஆதரவு அளிக்கப்படும். 
  • இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவுகளற்ற நகரங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு நிலையான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel