28th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
- புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- இதையடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன.
- திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது.
- மேலும், அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.
- இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள்.
- புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.
- இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
- இதையடுத்து, நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.
- முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்றது.
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
- டோக்கியோவில், அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற கூட்டாளர் நாடுகளால் ஐபிஇஎப் கடந்த ஆண்டு மே 23 அன்று கூட்டாக தொடங்கப்பட்டது.
- ஆஸ்திரேலியா, புருனே, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா ஆகிய 14 நாடுகளை ஐபிஇஎப் கொண்டுள்ளது.
- பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னேற்றும் குறிக்கோளுடன் கூட்டாளர் நாடுகளிடையே பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த முயல்கிறது.
- மலேசியத் தலைநகர் கோலா லம்பூரில் கடந்த 23ம் தேதி மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது.
- தொடரின் இறுதிநாளான இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் மற்றும் சீன வீரர் வெங் ஹோங்யாங் விளையாடினார்கள்.
- விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 9-வது இடம் பிடித்து உள்ள 30 வயதுடைய பிரணாய், தொடர்ச்சியாக போராடி இறுதியில் வெற்றி பெற்று உள்ளார்.
- முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார். 2 ஆவது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் 3ஆவது சுற்றில் ஆட்டம் அனல் பறந்தது.
- இறுதியாக 20-18 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிரணாய் தட்டிச் சென்றார். மொத்தம் 93 நிமிடங்கள் வரை இந்த போட்டி நடைபெற்றது.