27th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிடி ஆயோக் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம்
- கடந்த 2014-ல் பா.ஜ. ஆட்சிக்கு வந்தவுடன் , நாட்டில் அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிடிஆயோக அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பான இந்த அமைப்பின் உயரிய அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது.
- பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.
- இந்நிலையில் நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் எட்டாவது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே.27) நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.
- புது தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் 19 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள்/துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.
- ஆனால், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
- உடல்நிலை காரணமாக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அசோக் கெலாட் கூறியுள்ளார். டில்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவாலும், பஞ்சாப் அரசின் கோரிக்கைகளை ஏற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்வந்த் மானும் பங்கேற்கவில்லை. பினராயி விஜயன் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
- இன்றைய கூட்டத்தில் எந்த பயனும் இல்லை என நிதிஷ்குமார் கூறியுள்ளார். வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதால், முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி காரணமாக நிடி ஆயோக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொள்ளவில்லை.
- மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மே 25 அன்று ரிஷிகேஷில் (தெஹ்ரி) தொடங்கிவைத்த இரண்டாவது ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
- இந்தக் கூட்டத்தில் 20 உறுப்பு நாடுகள், 10 விருந்தினர் நாடுகள் மற்றும் இன்டர்போல், ஐஎம்எஃப் உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகளைச்சேர்ந்த 90 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு, ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழுவின் கூடுதல் செயலாளர் திரு. ராகுல் சிங் தலைமை தாங்கினார்.
- ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர் திரு. ஜியோவானி டர்டாக்லியா போல்சினி, இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சர் திரு ஃபேப்ரிசியோ மார்செல்லி ஆகியோர் இணைத் தலைமையேற்றனர்.
- சொத்து மீட்பு, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள், தகவல் பகிர்வுக்கு முறையான மற்றும் முறைசாரா ஒத்துழைப்பு வழிகள், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் பரஸ்பர சட்ட உதவி போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து கடந்த மூன்று நாட்களாக ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.
- பிரதிநிதிகள் ரிஷிகேஷில் தங்கியிருந்தபோது இந்தியாவின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உணவு வகைகளை சுவைத்தனர். கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9 முதல் 11 வரை மூன்றாவது ஜி20 ஊழல் ஒழிப்புப் பணிக்குழு கூட்டத்திற்கு மீண்டும் பிரதிநிதிகளை அழைக்க இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது.
- ஊழலுக்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தை வலுப்படுத்தும் ஜி 20 செயல் திட்டத்திற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் வகையில், அமைச்சர்கள் நிலையிலான ஊழல் ஒழிப்புக் கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது.
- மத்திய அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் "9 ஆண்டுகள் சேவா, சுஷாசன், கரிப் கல்யாண்" என்ற கருப்பொருளுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மூன்று அமர்வுகள் நடத்தப்பட்டன.
- முதல் அமர்வு ‘இந்தியா: முன்னேற்றப் பாதையில்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா எவ்வாறு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியுள்ளது என்பது குறித்து இந்த அமர்வு தெளிவுபடுத்தியது.