Type Here to Get Search Results !

26th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


26th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா நியமனம்
  • சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, 2022 செப்டம்பர் 19ல் டி.ராஜா நியமிக்கப்பட்டார்; 24ல் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து, மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.வி.கங்கா பூர்வாலா, 1962 மே 24ல் பிறந்தார்.
  • மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த தீபங்கர் தத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, 2022 டிசம்பர் முதல், பொறுப்பு தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவி வகித்து வருகிறார். 
  • தற்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்; 2024 மே 23 வரை, பதவியில் தொடர்வார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலாவை நியமிக்க, 2023 ஏப்ரல் 19ல், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரை செய்திருந்தது. தற்போது தான் நியமன அறிவிப்பை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் 
  • விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் - மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். 
  • தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் முத்தமிழ்ச்செல்வி, சிறு வயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பிய இவர், அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
  • இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முத்தமிழ்ச்செல்வி, ஏப்ரல் 5 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் தொடங்கினார். 51 நாட்கள் தொடர்ந்து பயணித்த அவர், கடந்த மே 23 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். 
  • ஏறத்தாழ 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ஒசாகா மாகாணத்தில், முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 53 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குநர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு ஆகியோர் கையொப்பமிட்டனர்.
  • தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உடனிருந்தனர்.
ஆக்கோ டெக்னாலஜி நிறுவனத்தின் பங்குகளை மல்டிபிள்ஸ் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் III மற்றும் சி பி பி இன்வெஸ்ட்மெண்ட் போர்ட் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்
  • ஆக்கோ டெக்னாலஜி மற்றும் சர்வீசஸ் தனியார் நிறுவனத்தின் கூடுதல் கட்டாயமாக மாற்றத்தக்க தொடர் மின்னணு விருப்ப பங்குகளை மல்டிபிள்ஸ் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் III மற்றும் சி பி பி இன்வெஸ்ட்மெண்ட் போர்ட் தனியார் நிறுவனம் ஆகியவை வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதல் மூலம் ஆக்கோ டெக்னாலஜி மற்றும் சர்வீசஸ் தனியார் நிறுவனத்தின் கூடுதல் கட்டாயமாக மாற்றத்தக்க தொடர் மின்னணு விருப்ப பங்குகளை மல்டிபிள்ஸ் பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் III மற்றும் சி பி பி இன்வெஸ்ட்மெண்ட் போர்ட் தனியார் நிறுவனம் ஆகியவை வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel