25th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விக்ராந்த் கப்பலில் இறங்கியது போர் விமானம் வரலாற்று சாதனை
- ராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், நம் கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற மிக பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்., மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
- மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.
- இதில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்த முடியும்.
- இந்த ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
- இந்த வரிசையில், ரஷ்ய தயாரிப்பான, மிக் 29கே போர் விமானம் மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் நம் வீரர்கள் கடந்த பிப்., மாதம் தரை இறக்கினர்.
- மேலும், இரவு நேரங்களில் போர் விமானங்கள் கப்பலில் இதுவரை தரை இறக்கப்பட்டது இல்லை. இந்நிலையில், விக்ராந்த் கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானத்தை பைலட்கள் முதல்முறையாக தரை இறக்கினர்.
- டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
- உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.
- இது உத்தராகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். உலகத் தரத்திலான வசதிகளுடன் சிறப்பான பயண அனுபவத்தை இந்த ரயில் வழங்கும்.
- குறிப்பாக, அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்வோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
- 2022-23 விவசாய ஆண்டின் முக்கிய பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
- உணவு தானியங்கள் – 3305.34 லட்சம் டன் (பதிவு)
- அரிசி – 1355.42 லட்சம் டன் (பதிவு)
- கோதுமை - 1127.43 லட்சம் டன் (பதிவு)
- கம்பு - 111.66 லட்சம் டன்
- மக்காச்சோளம் – 359.13 லட்சம் டன் (பதிவு)
- மொத்த பருப்பு வகைகள் - 275.04 லட்சம் டன்
- எண்ணெய் வித்துக்கள் – 409.96 லட்சம் டன்(பதிவு)
- பருத்தி – 343.47 லட்சம் பேல்கள் (ஒவ்வொன்றும் 170 கிலோ)
- கரும்பு - 4942.28 லட்சம் டன்கள் (பதிவு)
- 2022-23 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 3305.34 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டான 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 149.18 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.
- 2022-23-ம் ஆண்டில் அரிசியின் மொத்த உற்பத்தி (பதிவு) 1355.42 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 60.71 லட்சம் டன் அதிகம்.
- நாட்டில் கோதுமை (பதிவு) உற்பத்தி 1127.43 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு உற்பத்தியை விட 50.01 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.