Type Here to Get Search Results !

23rd May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆனது 'அடிடாஸ்'
  • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆகியுள்ளது 'அடிடாஸ் பிராண்ட்'. எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய ஸ்பான்சரான அடிடாஸ் வடிவமைத்த மற்றும் தயாரித்த ஜெர்சியை அணிந்து விளையாடும்.
  • வரும் 2028 மார்ச் மாதம் வரையில் இந்திய ஆடவர், மகளிர் மற்றும் அண்டர் 19 கிரிக்கெட் அணிகளுக்கு வேண்டிய ஜெர்சி, கிட் மற்றும் இதர மெர்சண்டைஸை அடிடாஸ் வடிவமைத்து மற்றும் தயாரித்து கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் அடிடாஸ் சிஇஓ பியான் குல்டன் ஆகியோர் இரு தரப்புக்கும் இடையிலான கூட்டை பரஸ்பரம் வரவேற்றுள்ளனர்.
  • கடந்த 2020 நவம்பரில் நைக் நிறுவனத்துடனான 15 ஆண்டு கால கிட் ஸ்பான்சர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து அதற்கான புதிய டெண்டரை பிசிசிஐ வெளியிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் (MPL) இணைந்தது. 
  • இருப்பினும் முன்கூட்டியே எம்பிஎல் வெளியேற கடந்த ஜனவரியில் 'கில்லர் ஆடை பிராண்ட்' இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக இணைந்தது. இந்த சூழலில் இனி அடிடாஸ் அதை தொடர உள்ளது.
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 42.85% வளர்ச்சி
  • உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவாக 503.92 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85% அதிகமாகும். முந்தைய ஆணடில் 352.75 லட்சம் பயணிகள் பயணித்தனர்.
  • மேலும் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18% அளவிற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை சேவை அதிகரித்துள்ளது.
  • 2023 ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47% அளவிற்கு மட்டுமே ரத்து செய்யப்பட்டது. அத்துடன் பயணிகளின் புகார் எண்ணிக்கை 10,000 பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவிற்கு குறைவாக இருந்தது.
இந்திய ரயில்வே, 20 அகலப்பாதை என்ஜின்களை பங்களாதேஷிடம் ஒப்படைத்துள்ளது
  • புதுதில்லி ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் பங்களாதேஷூக்கு 20 அகலப்பாதை ரயில் என்ஜின்களை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பிவைத்தார். 
  • பங்களாதேஷில் இருந்து அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் முகமது நூருல் இஸ்லாம் சுஜன் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார். 
  • இந்த நிகழ்வில், ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ஏ.கே. லஹோட்டி, வாரிய உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், பங்களாதேஷ் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel