20th May 2023 TAMIL TNPSC CURRENT PDF TNPSC SHOUTERS
உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 2) 2023
- சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 2) நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 19 வயது வீரர் பிரதமேஷ் ஜவஹர், எஸ்தோனியாவின் ராபின் ஜாட்மாவை 147-145 என்ற கணக்கில் வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார்.
- இதில் உலகின் 'நம்பர்-1' வீரர், நெதர்லாந்தின் மைக் ஸ்காலசரை சந்தித்தார். முதல் நான்கு சுற்று முடிவில் இருவரும் 119-119 என சமநிலையில் இருந்தனர். ஐந்தாவது, கடைசி செட் முதல் இரு வாய்ப்பில் இருவரும் 20-20 என சமபுள்ளி பெற்றனர். கடைசி வாய்ப்பில் பிரதமஷே (10-9) முந்தினார்.
- முடிவில் பிரதமேஷ் 149-148 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார். உலக கோப்பை 'சீனியர்' அரங்கில் இவர் வென்ற முதல் பதக்கம் இது.
- பெண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அவ்னீத் கவுர், 144-146 என பிரிட்டனின் எல்லா கிப்சனிடம் தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவ்னீத், துருக்கியின் இபெக்கை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவ்னீத் 147-144 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
- காம்பவுண்டு பிரிவு கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜாஸ் பிரவின் பங்கேற்றனர். பைனலில் இந்திய ஜோடி, வலிமையான தென் கொரியாவை எதிர்கொண்டது. முதல் மூன்று சுற்று முடிவில் இரு அணிகளும் 117-117 என சமநிலையில் இருந்தன.
- கடைசி, நான்காவது சுற்றில் இந்தியா 39-38 என முந்தியது. முடிவில் இந்திய அணி 156-155 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியா 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கம் கைப்பற்றியது.
- கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இதில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை பிடித்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
- இதற்கிடையே, முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் இடையே போட்டி ஏற்பட்டது.
- 4 நாட்கள் நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
- கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், துனியா விஜய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
- கடவுளின் பெயரில், முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- இதையடுத்து, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தனது குரு அஜ்ஜய்யா பெயரில் பதவியேற்றுக் கொண்டார். பிறகு, ஜி.பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே, சதீஷ் ஜார் கிஹோளி, ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
- பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
- கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து அன்னப்பறவை ஓவியத்தை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.
- கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில், 'ஜி - 7' நாடுகளின் மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில், இதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
- இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.இதற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் முதல் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை நேற்று திறந்து வைத்தார்.
- பின், காந்தியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி அவர் வணங்கினார். அப்போது பேசிய பிரதமர், ''இங்கு நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, உலகை அமைதி பாதைக்கு அழைத்துச் செல்லும்,'' என தெரிவித்தார்.
- மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு அமித் ஷா குஜராத் மாநிலம் துவாரகாவில் ரூ. 470 கோடி செலவில் அமையவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் (என்ஏசிபி) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் உட்பட பல உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.