Type Here to Get Search Results !

சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் தினம் 2024 / INTERNATIONAL MOUNT EVEREST DAY 2024

  • சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் தினம் 2024 / INTERNATIONAL MOUNT EVEREST DAY 2024: உலகின் மிக உயரமான சிகரமான, எவரெஸ்ட் சிகரம் இமயமலை தொடரில் நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் அமைந்துள்ளது. 
  • இது 8,848.86 மீட்டர் (29,031.7 அடி) உயரத்தில் உள்ளது. 1920ம் ஆண்டுவாக்கில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். 
  • பல குழுவினர் உச்சிக்கு அருகில் சென்றாலும், 9வது குழுவாக பயணித்த டென்சிங் நோர்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் வெற்றிகரமாக உச்சியை அடைந்தனர்.
  • ஜான் ஹன்ட் தலைமையிலான பயண குழுவில், டென்சிங் நார்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.
  • நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கே ஷெர்பா ஆகியோரின் குறிப்பிடத்தக்க சாதனையை கௌரவிக்கும் வகையில் மே 29 அன்று சர்வதேச எவரெஸ்ட் தினம் கொண்டாடப்படுகிறது.
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மலையேறுபவர்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாக, சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • இந்த நாள் மலையேறுபவர்களின் தைரியம், விடாமுயற்சி மற்றும் உறுதிப்பாட்டிற்கு மரியாதை செலுத்தவும், இயற்கையின் அழகு, எவரெஸ்ட் தொடர்பான சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது. 
  • மலையேறும் போது உயிர்நீத்தவர்களுக்கு நினைவு கூரவும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 முதல் 2022 வரை, 72 மலையேறுபவர்கள், பல்வேறு காரணங்களால் சாகச பயணத்தில் உயிர் துறந்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

  • சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் தினம் 2024 / INTERNATIONAL MOUNT EVEREST DAY 2024: எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 29,031 அடி (8,848 மீட்டர்) உயரத்தில் உள்ளது. 
  • இது நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இமயமலையின் மஹாலங்கூர் ஹிமால் துணைத் தொடரில் அமைந்துள்ளது. 
  • 1830 முதல் 1843 வரை இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாக இந்த மலைக்கு பெயரிடப்பட்டது. இந்த மலை நேபாளத்தில் "சாகர்மாதா" என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது "வானத்தின் தெய்வம்" என்று பொருள்படும். திபெத்தில் சோமோலுங்மா என்று அழைக்கப்படுகிறது. அதாவது "பிரபஞ்சத்தின் தாய் தெய்வம்". என்று பொருள்படும்.
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு வசந்த காலம், இலையுதிர் காலம் ஏற்ற காலமாகும். 
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான செலவு 25,000 முதல் 1,00,000 டாலர்கள் வரை இருக்கலாம். 
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சராசரியாக 2 மாதங்கள் ஆகும். 
  • எவரெஸ்ட் சிகரத்தை அடைய 2 முக்கிய பாதைகள் உள்ளன. நேபாளத்திலிருந்து தெற்கு கோல் பாதை மற்றும் திபெத்திலிருந்து வடக்கு கோல் பாதை. தெற்கு கோல் பாதை மிகவும் பிரபலமானது மட்டுமின்றி மலையேறுபவர்கள் அடிக்கடி ஏறும் பாதையாகும்.
  • எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி "மரண மண்டலத்தில்" உள்ளது. இது 8,000 மீட்டர் (26,247 அடி) உயரத்தில் உள்ளது.அங்கு ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக உள்ளது. அங்கு ஆக்ஸிஜன் துணை இல்லாமல் மனிதர்கள் வாழ்வது கடினம்.
  • மலையேறுபவர்கள் பெரும்பாலும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் இனக்குழுவான ஷெர்பாஸின் உதவியை பெறுகிறார்கள். ஷெர்பாக்கள் தங்கள் மலையேற்ற திறமைக்கு புகழ் பெற்றவர்கள். 
  • எவரெஸ்ட் பயணத்தின் போது ஏறுபவர்களுக்கு ஆதரவாக, வழிகாட்டிகள், ஊழியர்களாக பணியாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ENGLISH

  • INTERNATIONAL MOUNT EVEREST DAY 2024: The world's highest peak, Mount Everest is located in the Himalayan range on the border of Nepal and Tibet. It is at an elevation of 8,848.86 meters (29,031.7 ft). 
  • By 1920, the British had started their attempt to climb Mount Everest. Tensing Norgay and Edmund Hillary, who were the 9th group, successfully reached the summit, although many other groups made it close to the summit.
  • In an expedition led by John Hunt, Tenzing Norge and Edmund Hillary reached the summit of Mount Everest.
  • International Everest Day is celebrated on May 29 to honor the remarkable achievement of Edmund Hillary of New Zealand and Tenzing Norge Sherpa of Nepal.
  • International Mount Everest Day is observed to celebrate the achievements of mountaineers who have climbed Mount Everest.
  • The day is celebrated to honor the courage, perseverance and determination of mountaineers and to create awareness about the beauty of nature and the challenges associated with Everest.
  • It is also observed to remember those who lost their lives while climbing the mountain. From 2010 to 2022, 72 mountaineers have lost their lives on the adventure due to various reasons.

Some interesting facts about Mount Everest

  • INTERNATIONAL MOUNT EVEREST DAY 2024: Mount Everest is the highest peak in the world. It is 29,031 feet (8,848 meters) above sea level.
  • It is located in the Mahalangur Himal sub-range of the Himalayas on the border of Nepal and Tibet.
  • The mountain is named after George Everest who was the Surveyor General of India from 1830 to 1843. This mountain is also known as "Sagarmata" in Nepal. It literally means "goddess of the sky". Called Chomolungma in Tibet. It means "Mother Goddess of the Universe". means that
  • Spring and autumn are the best time to climb Mount Everest.
  • The cost of climbing Mount Everest can range from 25,000 to 1,00,000 dollars.
  • It takes an average of 2 months to climb Mount Everest.
  • There are 2 main routes to reach Mount Everest. Southern Gaulish route from Nepal and Northern Gaulish route from Tibet. The South Gol route is not only the most famous but also the most frequented route by trekkers.
  • The summit of Mount Everest is in the "death zone". It is at an altitude of 8,000 meters (26,247 feet) where oxygen levels are very low. It is difficult for humans to survive there without oxygen support.
  • Trekkers often enlist the help of Sherpas, a local ethnic group in Nepal. Sherpas are renowned for their trekking skills. Guides play an important role in serving as staff to support the climbers during the Everest expedition.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel