17th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
27வது முறையாக 'எவரெஸ்ட்' ஏறிய பிரபல வீரர் கமி ரிட்டா
- நம் அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதன் உயரம் 29 ஆயிரத்து 32 அடி. இந்நிலையில், இங்குள்ள சோலுகும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரர் கமி ரீட்டா, 53, 27வது முறையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துஉள்ளார்.
- மலையேற்றத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த கமி ரிட்டா, முதன் முதலில், 1994 மே 13ல், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 2022ல், 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
- சமீபத்தில், மற்றொரு மலையேற்ற வீரரான, நேபாளத்தைச் சேர்ந்த பசாங் தவா, 26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி, கமி ரிட்டாவின், 26 முறை சாதனையை சமன் செய்தார்.
- அவரை முந்தும் வகையில், நேற்று, 27வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி கமி ரிட்டா சாதனை படைத்து, தன் சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
- நேபாளத்திலும், வெளி நாடுகளிலும் 26 ஆயிரம் அடி உயரமான பல மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள கமி ரிட்டா, மவுன்ட் கே 2, மவுன்ட் சோ ஓயு, மவுன்ட் லோட்சே மற்றும் மனாஸ்லு உள்ளிட்ட பிரபலமான சிகரங்களிலும் ஏறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.5.2023) தலைமைச் செயலகத்தில், உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு (World Gastrology Organisation), தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் (Tamil Nadu Gastroenterologist Trust) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.
- இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளான சரியான உடல் எடையை பராமரித்தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உயர்தர தொழில்நுட்பம் குறைந்த செலவில் கிடைப்பதை ஊக்குவுக்கிறது.
- இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உலக சுகாதாரம் 10.10.2022 அன்றும், 18.10.2022 அன்று சுகாதார ஆராய்ச்சித் துறையும் கையொப்பமிட்டன.
- இந்த ஒத்துழைப்பு,தொழில்நுட்பத்தை அணுகுவதில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பது, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பது மற்றும் பொருத்தமான பயிற்சி திட்டங்களை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்திய போட்டி ஆணையம் (இசிஏ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவு ஒப்புதல் அளித்தது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்தியப் போட்டி ஆணையத்திற்கு (இசிஏ) இடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், அனுபவப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அனுபவங்களைக் கற்றுக்கொள்வதையும், பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் எகிப்து போட்டி ஆணையத்திடமிருந்து கற்றுக்கொள்ள உதவுகிறது. இது நுகர்வோருக்கு பெருமளவில் பயனளிக்கும்.
- போட்டிச் சட்டம் 2002, பிரிவு 18 ஆனது, இந்தியப் போட்டி ஆணையம் தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, எந்தவொரு வெளிநாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதன்படி, இந்தியா – எகிப்து இடையே மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாலத்தீவிலும், இந்தியாவிலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தந்த நாடுகளின் திறன் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உதவிபுரிவதோடு தங்களின் தொழில்முறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும். இந்தியா – மாலத்தீவு இடையே வலுவான பணி உறவுகளை மேம்படுத்தும்.
- உலகளாவிய கணக்காளர் தொழிலை மேம்படுத்துவதற்கு இந்தியாவிலும், மாலத்தீவிலும் உள்ள கணக்காளர்களின் மேம்பாடு குறித்து அண்மைக் கால தகவல்களை வழங்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
- பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு ரபிப் பருவம், 2022-23 (01.11.2023 முதல் 31.03.2023 வரை )க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை திருத்தியமைக்கவும் கரீஃப் பருவம், 2023 ( 01.04.2023 முதல் 30.09.2023 வரை)க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை நிர்ணயிக்கவும், உரங்கள் துறையின் ஆலோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 கிரேடு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வதற்கு இந்த ஒப்புதல் பயன்படும்.
- விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வது என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற கரீஃப் 2023-க்கு அரசு ரூ.38,000 கோடி மானியம் வழங்கும்.
- கரீஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் குறைந்த செலவில், நியாயமான விலையில் டிஏபி மற்றும் இதர பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்கள் கிடைப்பதை அமைச்சரவை முடிவு உறுதி செய்யும்.
- பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17,000 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்- 2.0-வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
- இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 105 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9 லட்சம் கோடி) அளவிற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- உலகில் மொபைல் ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. நடப்பு ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.90 ஆயிரம் கோடி) மதிப்பிலான மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
- சர்வதேச மின்னணுப் பொருட்கள் உற்பத்திச் சூழல் இந்தியாவை நோக்கி வருவதை அடுத்து, இந்தியா மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நாடாக உருவெடுத்து வருகிறது.
- இத்திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டது. 3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்கும் என்றும், 2430 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு அதிகரிக்கும் என்றும், 75,000 நேரடி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது எரிசக்தி மாற்ற பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக “எரிசக்தி மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக கடலோரக் காற்றாலையைப் பயன்படுத்துதல்: எதிர்காலத் திட்டம்” என்ற தலைப்பில் உயர்நிலைக் கூட்டம் மும்பையில் மே 16-ஆம் தேதி நடைபெற்றது.
- உலகளாவிய காற்றாலை எரிசக்திக் கவுன்சில் மற்றும் தேசிய காற்றாலை எரிசக்திக் கழகத்துடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
- அரசுப் பிரதிநிதிகளுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் முன்னணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.