Type Here to Get Search Results !

14th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமனம்
  • மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.
  • இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் காலையில் நடைபெற்றது. 
  • இதில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மத்திய பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சுதிர் சக்சேனா மற்றும் பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரி தின்கர் குப்தா ஆகிய 3 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
  • இதில் இப்போது கர்நாடக மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) உள்ள பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 
  • இதையடுத்து, இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் நேற்று மாலை பிறப்பித்தது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
  • ஐஐடி-டெல்லி பட்டதாரியான பிரவீன் சூட், 1986-ல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர்மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார். 
  • குறிப்பாக, 2004 முதல் 2007 வரையில் மைசூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2018 முதல் கர்நாடக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  • கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.
  • ஏவுகணைகளை வீசும்திறன் வாய்ந்த ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ்ஏவுகணையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
  • இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தற்போது நிலப் பகுதியிலிருந்தும், விமானத்திலிருந்தும், கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.
26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய உலக சாதனை
  • உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயர உச்சியை அடைந்தவர் என்ற சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டியான, 52 வயது, கமி ரீடா ஷெர்பா படைத்திருந்தார்.
  • அவர் 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, தமது முந்தைய சாதனையை முறியடித்திருந்தார்.
  • இந்நிலையில், பசங் தவா ஷெர்பா 26வது முறையாக, 8,849 மீட்டர் உயர உச்சியை அடைந்து, நேபாள வழிகாட்டி கமி ரீடாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் ஹங்கேரியை சேர்ந்த மலையேறும் வீரருடன் சேர்ந்து எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். 
  • இதற்கிடையே கமி ரீடா தனது 27வது பயணத்துக்காக எவரெஸ்ட் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளார். இந்த வாரத்தில் மட்டும் 5 வெளிநாட்டினர் உள்பட 19 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை தொட்டுள்ளனர்.
இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி - 23
  • உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கவரட்டி, மே 14-19 வரை இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சியான சமுத்ரா சக்தி-23 இன் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் படாமிற்கு வந்தடைந்தது. 
  • இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவையும் இதில் பங்கேற்கின்றன. 
  • இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேஆர்ஐ சுல்தான் இஸ்கந்தர் முடா, சிஎன் 235 கடல்சார் ரோந்து விமானம் மற்றும் பாந்தர் ஹெலிகாப்டர் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
  • சமுத்திர சக்தி பயிற்சியானது இரு கடற்படைகளுக்கும் இடையே இயங்கக்கூடிய தன்மை, கூட்டு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொழில்முறை தொடர்புகள், நிபுணத்துவ பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் ஆகியவை பயிற்சியில் அடங்கும். கடல் பயிற்சியின் போது, ஆயுதம் வீசுதல், ஹெலிகாப்டர் செயல்பாடுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், வான் பாதுகாப்பு பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் 
  • பாதுகாப்புத் துறையில் '‘தற்சார்பு இந்தியா’'வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில் (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
  • இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். 
  • ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238 (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன. 
  • இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் - 262, 2வது பிஐஎல் - 11, 3வது பிஐஎல் - 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.
சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் 2023 - தேஜஸ்வின் 'வெள்ளி'
  • நியூ லைப் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தேஜஸ்வின் சங்கர் 24, பங்கேற்றார். இவர், 2018ல் அமெரிக்க தொடரில் 2.29 மீ., தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தார். 
  • கடந்த 2022 காமன்வெல்த்தில் (பர்மிங்காம்) வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர், இம்முறை 2.21 மீ., தாண்டி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • 2007, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பஹாமஸ் வீரர் டொனால்டு தாமஸ் 38, இம்முறை 2.26 மீ., உயரம் தாண்ட, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஜமைக்கா வீரர் லுஷேன் வில்சன் (2.21 மீ.,) இரண்டாவது இடத்தை சங்கருடன் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel