Type Here to Get Search Results !

13th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 - காங்கிரஸ் வெற்றி
  • கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
  • இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
  • இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 65 இடங்களிலும் மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 
  • பிரதமர் மோடி மிக தீவிரமான பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால், கடைசி நேரத்தில் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவியுள்ளார். 
  • அதே நேரத்தில் கட்சி தாவிய இன்னொரு தலைவரான லட்சுமண் சவதி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும், குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகரில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
  • காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 
  • இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 
ட்விட்டர் புதிய சிஇஓ நியமனம்
  • எலான் மஸ்க் தனது ட்விட்டர் நிறுவனத்துல்ல புதிய சிஇஓவை நியமித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா்.
  • இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்க உள்ளார் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
வணிக நிறுவனங்கள் தடையின்றி எளிதாக வணிகம் செய்வதற்கான செயலாக்க மையத்தை (சி-பேஸ்) மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் உருவாக்கியுள்ளது
  • மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் (எம்சிஏ) நிறுவனங்களின் செயல்முறையை மையப்படுத்த, சி-பேஸ் என்னும் மையத்தை உருவாக்கியுள்ளது. 
  • நிறுவனங்களுக்கு உரிய தரவுகளை தடையின்றி வழங்கி அவற்றின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பதிவேட்டை முறையாகப் பராமரிப்பதற்கும் இது வகை செய்யும். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், நிறுவனங்கள் வெளியேறுவதை எளிதாக்குவதற்கும் சமீப காலங்களில் மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் எடுத்த பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் இது.
  • சி-பேஸ் அலுவலகத்தை மே 1ந்தேதி மத்திய பெருவணிக விவகார அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் விசாரணை இயக்குநர் திரு ஆர்.கே. டால்மியா தொடங்கி வைத்தார். திரு ஹரிஹர சாஹூ, அலுவலகத்தின் முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel