7th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை வெற்றி
- ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- இதன்படி கடந்த 2007ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டில் இத்திட்டத்துக்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
- ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
- விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்குப் பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் 2024ம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது.
- இந்த விண்கலத்தில் அனுப்புவதற்காக 'வியோமா மித்ரா' என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயார் செய்திருக்கிறது. இந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும்.
- இதற்கான ககன்யான் ராக்கெட் திட்டத்தின் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
- இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 240 விநாடிகள் நடைபெற்ற இச்சோதனை ஓட்டம், திட்டமிட்டபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மத்திய உள்துறை அமைச்சர், கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரபிரதேசத்தில் உள்ள கௌசாம்பியில், கௌசாம்பி பெருவிழா-2023 ஐ தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் விளையாட்டு விழாக்களை நடத்த ஊக்குவித்தார் என்று அவர் கூறினார்.
- கொரோனா தொற்றுக்கு முன்பு 2019-ம் ஆண்டு 1.93 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (FTAs) இந்தியாவிற்கு வந்துள்ளனர். குடியேற்றப் பணியகத்திலிருந்து பெறப்பட்ட அண்மைத் தகவல்களின்படி, 2022-ம் ஆண்டில் இந்தியா 61.9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15.2 லட்சமாக இருந்தது.
- இந்தியாவில் சுற்றுலா மூலம் 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் பெற்ற அந்நியச் செலாவணி வருவாய் (FEE) விவரங்கள் (ரூ. கோடியில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- 2021ம் ஆண்டு சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி - ரூ. 65,070 கோடி
- 2022ம் ஆண்டு சுற்றுலா மூலம் பெற்ற அந்நியச் செலாவணி - ரூ. 1,34,543 கோடி
- நாட்டில் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் சுற்றுலா அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
- நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ”தேகோ அப்னா தேஷ்” முயற்சி தொடக்கம்.
- சிறந்த சேவைத் தரங்களை வழங்குவதற்காக மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ‘சேவை வழங்குநர்களுக்கான திறன் உருவாக்கம்’ (CBSP) திட்டத்தின் கீழ் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
- 24x7 கட்டணமில்லா பல மொழி சுற்றுலா உதவி எண்.
- 166 நாடுகளின் மக்களுக்கு இ-சுற்றுலா விசா, இ-வணிக விசா, இ-மருத்துவ விசா, இ-மருத்துவ உதவி விசா மற்றும் இ-கான்பரன்ஸ் விசா ஆகிய 5 துணை வகைகளுக்கு இ-விசா வசதியை வழங்குதல்
- எளிமையாக்கப்பட்ட இ-விசா மற்றும் விசா கட்டணம் கணிசமாக குறைப்பு
- நாடு முழுவதும் 55 இடங்களில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த நகரங்களில் உள்ள உட்கட்டமைப்புகள் ஜி-20 கூட்டங்களுக்காக மேம்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
- இந்தக் கூட்டங்களுக்கு வரும் பிரதிநிதிகள் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நம் நாட்டின் சுற்றுலாத் தூதுவர்களாக மாறலாம். முக்கியமான சுற்றுலாத் தளங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.