4th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு - இரு நாடுகளிடையே ரயில் பாதை அமைக்க திட்டம்
- இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் வாங்சுக் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
- அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
- இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பூடான் உள்ளது. இரு நாடுகள் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன.
- இந்தியா - பூடான் இடையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளோம். இது இருநாடுகள் இடையேயான முதல் ரயில் பாதை திட்டமாக இருக்கும்
- கொரோனா தொற்று, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றினால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
- முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது.
- இந்நிலையில், உலக வங்கி தனது முந்திய இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீடான 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
- தற்போது இந்தியாவில் நிலவும் பொருட்களின் நுகர்வு, இந்தியா எதிர்கொள்ளும் சவாலான நிபந்தனைகள் ஆகியவற்றினால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சற்று குறைந்து 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
- அதிகரிக்கும் கடன் செலவு, குறைந்த வருமானம் ஆகியவற்றினால் நுகர்வோர் பயன்பாடு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்ததாக உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.
- இதில், ஏற்கனவே 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த அமைப்பில் இணைய ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்தன.
- இதற்கு ஏற்கனவே உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், இதற்கான ஒப்புதலை அளிக்க துருக்கி, ஹங்கேரி ஆகிய நாடுகள் தாமதம் செய்தன.
- இந்நிலையில், அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்த நிலையில், 31-வது நாடாக ஃபின்லாந்து இன்று இணைய உள்ளது. இது வரலாற்றுப்பூர்வமான வாரம் என்று நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டென்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா-இலங்கை பத்தாவது இருதரப்பு கடல்சார் பயிற்சி கொழும்பில் 3 முதல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
- இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் கில்டன், உள்நாட்டில் கட்டப்பட்ட கமோர்டா கிளாஸ் ஏஎஸ்டபிள்யூ கார்வெட், ரோந்து கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி ஆகியவை இதில் கலந்து கொள்கின்றன. இலங்கை கடற்படையின் சார்பில் கஜபாகு மற்றும் சாகர ஆகிய கப்பல்கள் பங்கேற்கின்றன.
- இரு தரப்பிலிருந்தும் கடல்சார் ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்புப் படைகளும் பயிற்சியில் பங்கேற்கும். இதற்கு முன்பு இந்தக் கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7 முதல் 12 வரை நடைபெற்றது.
- பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் போது, பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துதல், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றை இந்தக் கூட்டுப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் தோழமையின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த துறைமுக அளவில் தொழில்சார், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.