3rd April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை, பிரதமர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின் வைரவிழாக் கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார். கடந்த ஏப்ரல் 1, 1963-ல் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்தியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில், சிறந்த சேவைக்காக குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் பெற்றவர்கள், சிபிஐ-யின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கான தங்கப் பதக்கம் பெற்றவர்கள் ஆகியோருக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பதக்கங்கள் வழங்கினார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் உள்ள சிபிஐ-யின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்துவைத்தார். சிபிஐ-யின் வைரவிழாக் கொண்டாட்ட ஆண்டின் நினைவாக தபால்தலையை அவர் வெளியிட்டார்.
- அத்துடன் சிபிஐ-யின் ட்விட்டர் கையாளுதலையும் அவர் தொடங்கிவைத்தார். சிபிஐ-யின் மேம்படுத்தப்பட்ட நிர்வாகக் கையேடு, வங்கி மோசடி குறித்த விவரங்கள், சிபிஐ வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள், வெளிநாட்டு பரிமாற்றத்திற்கான சர்வதேச காவல்துறை ஒத்துழைப்புக் குறித்த கையேடு ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 20-வது அமர்வு மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்குள் கலாச்சாரத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
- CEOWORLD என்ற அமெரிக்க பத்திரிகையின் 2023-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஎச்எம் நிறுவனத்திற்கு 13-வது இடம் கிடைத்துள்ளது.
- அதே நேரத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருந்தோமல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் முதலாமிடம் கிடைத்துள்ளது. இந்த இந்த தரவரிசை ஏழு அறிவியல் சார் அளவீடுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு 38-வது இடத்தில் இருந்த சென்னை ஐஎச்எம் நிறுவனம், தரவரிசையில் படிப்படியாக முன்னேறி இந்த ஆண்டு 13-வது இடத்தை பிடித்துள்ளது. 2017-ம் ஆண்டு 34ம் இடத்திற்கும், 2018-ம் ஆண்டு 28-ம் இடத்திற்கும் முன்னேறியது.
- தொடர்ந்து 2019-ம் ஆண்டு 24-ம் இடத்தையும், 2020-ம் ஆண்டு 22-ம் இடத்தையும் பிடித்திருந்தது. அதேநேரத்தில் 2021ம் ஆண்டு 18-ம் இடத்திற்கு முன்னேறிய இந்நிறுவனம், கடந்த ஆண்டு 14-ம் இடத்தில் இருந்தது.
- வளாக ஆள்சேர்ப்பு மூலம் முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள், விரைவு சேவை உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள், சில்லரை வணிகத்துறைகள் ஆகியவை இந்த தரவரிசைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.