28th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எல்.ஐ.சி., புதிய தலைவர் சித்தார்த்த மொஹந்தி
- மத்திய அரசின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான தலைவர்கள் நியமனத்திற்கான தேடுதலில், எப்.எஸ்.ஐ.பி., எனப்படும் 'நிதிச் சேவைகள் நிறுவனப் பணிகள் அமைப்பு' கடந்த மாதம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
- இதைத் தொடர்ந்து எல்.ஐ.சி., எனப்படும் 'லைப் இன்சூரன்ஸ் கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா'வின் தலைவராக, சித்தார்த்த மொஹந்தி பரிந்துரைக்கப்பட்டார்.
- இதையடுத்து, மொஹந்தியை மத்திய அரசு எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய தலைவராக நியமித்து நேற்று அறிவித்தது. இப்பதவியில், மொஹந்தி தன் 62 வயது வரை அல்லது 2025 ஜூன் 7ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். தற்போது மொஹந்தி எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
- மேலும் எம்.ஆர்.குமார், கடந்த மார்ச் 13ம் தேதியுடன் தலைவர் பதவியை நிறைவு செய்ததை அடுத்து, தலைவர் பொறுப்பையும் சேர்த்து பார்த்துவந்தார்.
- எல்.ஐ.சி.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பி.சி.பட்னாயக், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து கணிக்கும் சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்), அது குறித்த தனது சமீபத்திய அறிக்கையை கடந்த 11-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டுக்கான உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
- 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வானொலி இணைப்பிற்கு இந்த துவக்கம் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
- நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பத்ம விருது பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் விழாவில் கலந்து கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, அவர்களை வரவேற்றார்.
- அகில இந்திய பண்பலையாக மாறும் முயற்சியில், அகில இந்திய வானொலியின் பண்பலை சேவை விரிவாக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றார் அவர்.
- அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்கள் மற்றும் நாட்டின் 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு என்று அவர் குறிப்பிட்டார்.
- நாட்டில் பண்பலை வானொலித் தொடர்பை விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ள நிலையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 84 மாவட்டங்களில் இந்த 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளின் தொடர்பை விரிவாக்குவதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரப்பிரதேசம், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இவற்றுள் அடங்கும்.
- இந்த விரிவாக்கத்தின் மூலம் அகில இந்திய வானொலியின் பண்பலைச் சேவை இதுவரை கிடைக்கப்பெறாத 2 கோடி மக்கள் இப்போது பயனடைவார்கள். சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஒலிபரப்பு விரிவாக்கம் பெறும்.
- எட்டு முக்கிய தொழில் துறைகளில் குறியீட்டு எண் மார்ச் 2022ஐ ஒப்பிடுகையில், மார்ச் 2023-ல் 3.6 சதவீதமாக (தற்காலிகமானது) அதிகரித்தது. நிலக்கரி, உரம், எஃகு, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட, மார்ச் 2023-ல் அதிகரித்தது. நிலக்கரி, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புப் பொருட்கள், உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகள் தொழில் உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
- நிலக்கரி உற்பத்தி 12.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், உரங்களின் உற்பத்தி 9.7 சதவீதமும், எஃகு உற்பத்தி 8.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது.
- கச்சா எண்ணெய் உற்பத்தி 2.8 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 0.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 1.8 சதவீதமும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட, 2023 மார்ச் மாதத்தில் உற்பத்தி குறைந்தது
- புதுதில்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் போக்குவரத்துத் துறை அமைச்சர்களின்10-வது கூட்டத்திற்கு திரு நிதின் கட்கரி தலைமை தாங்கினார்.
- இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- சிறந்த திறன்மிக்க, நீடித்த தன்மையை அடைவதற்காக போக்குவரத்தில் கரியமிலவாயு உமிழ்வை குறைத்தல், மின்னணு மாற்றம் மற்றும் புதுமை தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.
- போக்குவரத்துத் துறையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையே இணைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.