26th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
11 சதுப்பு நிலங்களை ராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்த்த இந்தியா
- இந்தியவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 13,26,677 ஹெக்டேர் பரப்பளவில் 75 ராம்சர் தளங்களை உருவாக்க, ராம்சர் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்த 11 புதிய தளங்களில் தமிழ்நாட்டில் 4 தளங்கள், ஒடிசாவில் 3, ஜம்மு & காஷ்மீரில் 2 மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒன்று (1) ஆகியவை அடங்கும். இதனால் தற்போது நாட்டில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவுகளை முக்கியமாக வர்த்தகத் துறைகளில் பேணுவதில் முக்கிய பங்களிப்பை அளித்தமைக்கு, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் பொதுப் பிரிவில் ரத்தன் டாடா கெளரவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
- வர்த்தகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவை பலப்படுத்தியதற்காக ரத்தன் டாடாவின் பங்களிப்பை பாராட்டி இந்த விருதை ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. இந்த விருது வழங்கும்போது டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உடன் இருந்தார்.
- ரத்தன் டாடா, இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை 2000 ஆண்டிலும், பத்ம விபூஷன் விருதை 2008 -லும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சி மனதின் குரல் 100-வது அத்தியாயத்தை குறிக்கும். தேசிய மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தலைமையில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார்.
- வானொலியில் மாதந்தோறும் ஒலிபரப்பாகும் பிரதமரின் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்து வெற்றிப்பெற்றதையடுத்து, இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்தியாவில் மருத்துவக் கருவிகள் துறை சுகாதாரத்துறையின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்குகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் போது சுவாசக்கருவிகள், பிபிஇ உடைகள், என்-95 முகக்கவசங்கள் போன்றவற்றின் தயாரிப்புக்கு இந்தத்துறை மிகப்பெரும் பங்களிப்பை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில் மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பொதுசுகாதார நோக்கங்களான எளிதில் கிடைத்தல், குறைந்த செலவில் தரமானதாக கிடைத்தல், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியும்.
- சீரான வளர்ச்சிக்கும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவித்து, மருத்துவக் கருவிகள் உற்பத்தியை மேற்கொள்வது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்கும்.
- நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறையை துரிதப்படுத்துவதோடு, உலகளாவிய சந்தையில் மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இந்தியாவின் பங்கினை அடுத்த 25 ஆண்டுகளில் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கருவிகள் துறையின் தற்போதுள்ள 11 பில்லியன் டாலர் என்பதிலிருந்து 50 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமையவுள்ளன.
- அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் செவிலியர் கல்வியில் தரம், நியாயமான கல்வி கட்டணம் ஆகியவற்றை உறுதி செய்யும். செவிலியர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக்கல்வி செயலாளர் ஆகியோர் இதற்கான பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.
- ஜி20இன் கீழ், மூன்றாவது கல்வி பணிக்குழுக் கூட்டம் இன்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ‘பணியின் எதிர்கால சூழலில் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான திறன்களை உருவாக்குதல்' என்ற கருத்தரங்கு தொடங்கியது.
- இதில் கல்வித் துறையை உலகளவில் மாற்றுவதற்கான புதுமையான ஆலோசனைகள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாக சென்னை மற்றும் அமிர்தசரஸில் நடைபெற்ற இரண்டு பணிக்குழுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக இப்பணிக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.
- 3 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச அமைப்பு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றள்ளனர்.
- இக்கூட்டத்தின் முதல் நாளில் மாநில கல்வி அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- இப்பணிக்குழுக் கூட்டத்தில் 3 குழு விவாதங்கள் நடைபெறுகின்றன. பிரேசில், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், யுனிஃசெப் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
- மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மூன்றாவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை, உயா்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் உள்ளிட்ட அது தொடா்பான அனைத்து பணிகளை மேற்கொள்ள ரூ.299.46 கோடிக்கு லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இந்தப் பணியை ஒப்பந்தத்துக்கு எடுத்துள்ளது.
- இதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சாா்பாக மெட்ரோ வணிகப் பிரிவின் துணைத் தலைவா் சுனில் கட்டாா் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
- இரண்டாம் கட்டப் பணியின் இறுதி டிராக் ஒப்பந்தமான இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவி வழங்கியுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் எஸ்.அசோக் குமாா் (தடங்கள் மற்றும் உயா்நிலை கட்டுமானம்), கூடுதல் பொது மேலாளா் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), பொது ஆலோசகா்கள் மற்றும் லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.