25th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகம் முழுவதும் ரூ.93 கோடியில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகும் நெல் மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
- மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்க, 10 மாவட்டங்களின் 18 இடங்களில் மொத்தம் 2.86 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் ரூ.238.07 கோடியில் அமைக்க உத்தரவிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
- தற்போது 2-ம் கட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.93.03 கோடியில் 1.17 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- இதுதவிர, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா புதுக்காடு கிராமத்தில் 750 டன் கொள்ளளவில் ரூ.2 கோடியில் தாலுகா செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
- சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நெல் கொள்முதல் நிலையங்கள்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 டன் நெல் சேமிக்கும் வகையில், தஞ்சாவூரில் 20, திருவாரூர்-10, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை - 14, திண்டுக்கல் - 9, புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி - 6, கடலூர் - 2, காஞ்சிபுரம் மற்றும்செங்கல்பட்டு - 2 என மொத்தம் 10 மாவட்டங்களில் ரூ.39.37 கோடியில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற அவருக்கு பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- இந்நிலையில் 2-வது நாளான பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பின்னர், வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்கள், பயணிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களை அவரிடம் காண்பித்து மகிழ்ந்தனர்.
- திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேஇயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் கொச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள்.
- சுற்றுலா பயணிகளையும் இது வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டமானது துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம்.
- கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டம் ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
- தாதர் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களுக்கு சென்ற, பிரதமர் மோடி, அங்கு, சில்வாசா நகரில், 203 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
- அவரை, பிரதமர் மோடியை, மொபைல் போன் மின்விளக்குகளால், அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.இம்மருத்துவமனையில் 24 மணிநேர நுாலம், சிறப்பு மருத்துவ பணியாளர்கள், மருத்துவ ஆய்வகங்கள், ஸ்மார்ட் விரிவுரை அரங்குககள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், உடற்கூறியல் அருங்காட்சியகம், ஒரு கிளப்ஹவுஸ், கிளப் ஹவுஸ், ஆசிரிய விடுதிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வெளிப்புற மற்றும் உள் விளையாட்டுகள் தவிர மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன.
- மேலும், 4,850 கோடி ரூபாய் மதிப்பிலான, 96 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 165 கோடி ரூபாய் செலவில் தேவ்கா பகுதியில் கட்டப்பட்ட 5.4 கி.மீ., கடல்முனையையும் திறந்து வைத்தார். இங்கு, ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகள், தோட்டங்கள், ஓட்டல்கள் உட்பட, பல வசதிகள் உள்ளன.