21st April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்
- தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதனை பின்பற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார்.
- அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
- எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
- மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-யின் ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) டிரான்ஸ்மிஷன் திட்டத்தின் கட்டுமானத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்க நிறுவனமான கேபிஎஸ்1 டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மேகா என்சீனியரிங் & இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
- இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டதன் மூலம், ரூ.70, 974 கோடிமதிப்பிலான 52 டிரான்ஸ்மிஷன் திட்டங்களை, ஆர்இசிபிடிசிஎல் வெற்றிகரமாக ஒப்படைத்தது.
- ஆர்இசிபிடிசிஎல்- இன் தலைமை செயல் அதிகாரி திரு ராகுல் திவேதி, மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் திரு பிரவின் ஷரத் தீக்ஷித்திடம் எஸ்பிவியை ஒப்படைத்தார்.
- மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட். இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டத்தின் வெற்றிகரமான ஏலதாரர் ஆகும்.
- இந்த வேலையில் 765 கி.வா இரட்டை மின்சுற்று லைன் மற்றும் கவ்தா PS1 இன் விரிவாக்கம் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தை 21 மாதங்களில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பிரிவில் பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது.
- விஞ்ஞான் பவனில் 16-வது குடிமைப்பணி சேவைகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து விருதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலர் திரு ராஜேஷ் பூஷன் பெற்றுக்கொண்டார்.