1st April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
- கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா' நடைபெற்றது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பழ.அதியமான் எழுதிய 'வைக்கம் போராட்டம்' நூலின் மலையாள மொழிபெயர்ப்பு தற்போது வெளியிடப்படுகிறது.
- விழாவில், மார்க்சிய கம்யூ.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் கேரள அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
- ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிற்கு பிறகு இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும். கடந்த 2022-23ம் நிதியாண்டில், மொத்த வரி வசூல் 18.10 லட்சம் கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட, 22 சதவீதம் அதிகமாகும்.
- முழு ஆண்டுக்கான சராசரி மொத்த மாத வசூல் 1.51 லட்சம் கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 1.50 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின், மார்ச் மாதத்தில் வசூலாகும் இரண்டாவது அதிகபட்ச வசூல் என்பதை பதிவு செய்துள்ளது.
- நடப்பாண்டு, 2023ம் ஆண்டு மார்ச் மாத ஜி.எஸ்.டி., வருவாய் முந்தைய ஆண்டு இதே மாதத்தில் வசூலான வரி வருவாயைவிட 13 சதவீதம் அதிகம். மேலும் 2023 மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி.,க்கான வரி தாக்கலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது.
- கடந்த நிதியாண்டில் மொத்த வசூல் :=18.10 லட்சம் கோடி ரூபாய். சராசரி மாத வசூல் = 1.51 லட்சம் கோடி ரூபாய், முந்தைய ஆண்டை விட, 22 சதவீதம் அதிகம், மாத வசூல், நான்கு முறை 1.50 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், வசூல் 1.68 லட்சம் கோடி ரூபாய்
- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில், போபால் மற்றும் புதுடில்லி இடையேயான, 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- இந்த ரயில் இரு நகரங்களுக்கும் (போபால் - டில்லி) இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும்.இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும்.
- இந்திய கடற்படை செயல்பாடுகள் பிரிவின் தலைமை இயக்குநராக வைஸ் அட்மிரல் அதுல் ஆனந்த் பொறுப்பேற்றார். அவர் 01 ஜனவரி 1988 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகக் கிளையில் நியமிக்கப்பட்டார்.