19th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை குழு ஒப்புதல்
- திரைப்படங்களுக்கான தணிக்கை, 'யு, யு/ஏ, ஏ' என்ற மூன்று வகையாக தற்போது வழங்கப்படுகிறது.
- 'யு' சான்று அனைத்து வயதினரும் பார்க்க அனுமதிக்கிறது. 'யு/ஏ' சான்று, 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர் கண்காணிப்புடன் பார்க்க அனுமதிக்கிறது. 'ஏ' சான்று, பெரியவர்களுக்கு மட்டுமானதாக உள்ளது.
- இதை ஒளிப்பதிவு திருத்த மசோதாவில், 'யு, யு/ஏ 7 பிளஸ், யு/ஏ 13 பிளஸ், யு/ஏ 16 பிளஸ் மற்றும் ஏ' என, ஐந்து வகையாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மேலும், இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் முதல், தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரை அபராதம் விதிக்கவும் இந்த புதிய திருத்த மசோதா வழி செய்கிறது.
- இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- குவாண்டம் தொழில்நுட்பத்தில் துடிப்புமிக்க, புதிய சூழலை உருவாக்குவதையும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 2023-24-ல் இருந்து 2030-31 வரை ரூ.6003.65 கோடி செலவில் தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இது குவாண்டம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்கும்.
- சூப்பர்கண்டக்டிங், போட்டோனிக் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தளங்களில் 8 ஆண்டுகளில் 50-1000 பிசிக்கல் க்யூபிட்ஸ் உடன் குவாண்டம் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளது.
- இந்தியாவுக்குள் 2000 கி.மீ. தூரத்தில் உள்ள தரை நிலையங்களுக்கிடையே செயற்கைக்கோள் அடிப்படையிலான குவாண்டம் தகவல் தொடர்புகளை கிடைக்கச்செய்யும்.
- இதர நாடுகளுடன் தொலைதூர குவாண்டம் தகவல் தொடர்புகளையும் 2000 கி.மீ. தூரம் வரை நகரங்களுக்கிடையேயான குவாண்டம் தகவல் பரிமாற்றத்தையும் இது கொண்டிருக்கும்.
- அணுசக்தி நடைமுறைகளில் உயர்நிலை உணர்திறன் கொண்ட மேக்னோ மீட்டர்களை உருவாக்கவும், துல்லியமான நேரத்திற்கான அணுசக்தி கடிகாரங்களை உருவாக்கவும் இந்த இயக்கம் உதவிசெய்யும். சூப்பர்கண்டக்டர், நவீன செமி கண்டக்டர் வடிவங்கள் போன்ற குவாண்டம் பொருட்களை வடிவமைக்கவும் இது உதவியாக இருக்கும்.