18th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் `சிறந்த நெசவாளர் விருது' ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
- மேலும், ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் காலமாற்றத்துக்கேற்ற வண்ணங்களின் போக்கை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான `சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது' 2022-23-ம் ஆண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான சிறந்த பட்டு நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு- திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் வி. ராஜலெட்சுமிக்கும், 2-ம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு சங்க உறுப்பினர் எம். சுரேஷுக்கும், 3-ம் பரிசு ஆரணி பட்டு சங்க உறுப்பினர் எம். மணிக்கும், பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு, பரமக்குடி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் எம்.கே.சரவணன், 2-ம் பரிசு பரமக்குடி, கலைமகள் கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் ஜி.எல்.நாகராஜனுக்கும், 3-ம் பரிசு சேலம், தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் க.இந்திராணிக்கும் என 6 விருதாளர்களுக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- இளம் வடிவமைப்பாளர் விருதில் முதல் பரிசு கோயம்புத்தூரைச் சேர்ந்த ம.சண்முகப்பிரியாவுக்கும், 2-ம் பரிசு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு வடிவமைப்பு தொழில்நுட்பம் படிக்கும் திருப்பூர், வி.சிபினுக்கும், 3-ம் பரிசு ஆரணியைச் சேர்ந்த ம.ஜ.கிரண்குமாருக்கும் பரிசுத்தொகையாக ரூ.2.25 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி ஆணையர் த.பொ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஏப்ரல் 17-ந் தேதி இந்திய கடற்படையின் பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பணியில் சேர்ந்த அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்களில் நிபுணராவார்.
- அவர் கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இங்கிலாந்தின் ஸ்ரீவென்கம் இணைப்படைப்பிரிவு கல்லூரி, கராஞ்சா கடற்படை கல்லூரி, அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் அவர் பயின்று தேர்ச்சிபெற்றார்.
- அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற அவர், ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத், ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் குலிஷ்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஐஎன்எஸ் மைசூர்; விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.
- பதவி உயர்வு பெற்று, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) அவர் பணியாற்றினார்.
- இந்திய கடற்படையில் அனைத்து பயிற்சிகளையும் நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். பல்வேறு பதவிகளை வகித்த அவர், மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.