17th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வாரணாசியில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் 100வது ஜி20 கூட்டம்
- இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ்,100வது ஜி20 கூட்டத்தை ஏற்பாடு செய்து இருப்பதன் மூலம் ஒரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. வாரணாசியில் வேளாண் துறையின் தலைமை விஞ்ஞானிகளின் கூட்டமானதே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடக்கும் 100வது ஜி20 கூட்டமாகும்.
- 2வது சுகாதார பணிக்குழுக் கூட்டம் கோவாவிலும், இரண்டாவது டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுக் கூட்டம் ஐதராபாத்திலும், விண்வெளி பொருளாதார தலைவர்களுக்கான முன்நிகழ்வு கூட்டம் ஷில்லாங்கிலும் நடைபெற்றது.
- கடந்த 16 நவம்பர் 2022ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தியாவின் ஓராண்டுகால ஜி20 தலைமைத்துவ பொறுப்பு 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டு வரும் 30 நவம்பர் 2023 வரை இருக்கும்.
- முன்னதாக 8 நவம்பர் 2022ல் ஜி20 இலச்சினையும், ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் "வசுதெய்வ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" போன்றவற்றை பிரதமர் முன்மொழிந்து தொடங்கி வைத்தார்.
- நமது தேசியக்கொடியின் வண்ணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜி20 இலச்சினை, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பூமிக்கு ஆதரவான நமது அணுகுமுறை மற்றும் வளர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
- தைவான் நாட்டைச் சேர்ந்த பவு சென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலக புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது.
- பவு சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் 2,302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்க உள்ளது.
- இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசிற்கும் ஹை க்ளோரி புட் வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு முதல்வரால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 2023, மார்ச் மாதத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 1.34 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.
- இது 2023 பிப்ரவரி மாதத்தில் 3.85 சதவீதமாக இருந்தது. அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், ஜவுளிகள், உணவு அல்லாதப் பொருட்கள், கனிம வளங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை வாயு, தாள்கள், தாள் பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததையடுத்து மார்ச் 2023-ல் பணவீக்க விகிதம் குறைந்தது.
- ஜனவரி 2023-ல் அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் 150.7 ஆகவும், பணவீக்க விகிதம் 4.80% ஆகவும் இருந்தது. 2023, பிப்ரவரி மாதத்தில் அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் 150.9% ஆகவும், பணவீக்க விகிதம் 3.85% ஆகவும் இருந்தது. மார்ச் 2023-ல் அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் 150.9% ஆகவும் பணவீக்க விகிதம் 1.34% ஆகவும் இருந்தது.