14th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு
- இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது. ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலுங்கானா அரசு கட்டியுள்ளது.
- 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன. இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலுங்கானா முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன. அம்பேத்கர் சிலை திறப்பு விழாவையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- 11.4 ஏக்கரில் ரூ 146 கோடியில் 360 டன் ஸ்டெயின்ஸ் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் நாடளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத்தில் ஹூசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாதலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
- அந்த மாநிலத்தின் குவாஹாத்தி நகரில் நடைபெற்ற விழாவில் ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- குவாஹாத்தியில் ரூ.1,123 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். இது வடகிழக்கின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும்.
- அசாமின் நல்பாரி, நகாவோன், கோகராஜ்ஹர் நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளையும் அவர் திறந்துவைத்தார். மேலும் ரூ.14,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- பாகிஸ்தான் கடுமையான நிதிபற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. அங்கு உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. கடன் வழங்க உலக வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்டிடம் பாகிஸ்தான் உதவி கேட்டு கைஏந்தியது.
- இதையடுத்து ரூ.8 ஆயிரம் கோடி நிதி உதவியை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கி உள்ளது. இதை பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷக் தார் உறுதிப்படுத்தினார்.
- ஏற்கனவே உலக வங்கி கட்டுப்பாடுகளை நிறைவேற்ற கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட் ரூ.16 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியிருந்தது. இப்போது மீண்டும் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும், திருநங்கையர் தினமான ஏப்., 15ல், அவர்களை சிறப்பிக்கும் வகையில், அரசு விருது வழங்குகிறது.
- விருது பெறும் திருநங்கைக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சமூகத்துக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர் முன்னேற்றத்துக்காக, 22 ஆண்டுகளாக, தன் கிராமியம் மற்றும் நாடகக் கலை வழியாக, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யா, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
- அவரது சேவையை பாராட்டி, 2023ம் ஆண்டுக்கான, சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை, நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியம் (IMF) - உலக வங்கி (WB) வசந்த கால கூட்டத் தொடர்களில் இன்று வாஷிங்டன் D.C இல் இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
- ஜப்பான் நிதியமைச்சர் திரு. சுசுகி ஷுனிச்சி, பிரான்ஸ் கருவூல பொது இயக்குனர் திரு. இம்மானுவேல் மௌலின் மற்றும் இலங்கையின் நிதி அமைச்சர் திரு. ஷெஹான் சேமசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கையின் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான திரு. ரணில் விக்கிரமசிங்க காணொளி வாயிலாக இதில் கலந்து கொண்டார்
- இந்நிகழ்வின் நோக்கமானது இலங்கையுடன் இணைந்து கடன் வழங்குவதில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான பலதரப்பு ஒத்துழைப்பை நிரூபிப்பதாகும்.
- இந்நிகழ்வில், இலங்கையின் ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்பை வழிநடத்த இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று இணைத் தலைவர்களின் கீழ் இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்குவதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.
- மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
- கடன் மறுசீரமைப்பு விவாதங்களில் அனைத்து கடனாளிகளையும் நடத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்த கடனாளர்களிடையே ஒரு ஒத்துழைப்பு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
- உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்தகால கூட்டங்களை முன்னிட்டு இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாவது கூட்டம் ஏப்ரல் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
- மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்கள்.
- ஜி20 உறுப்பு நாடுகள், 13 சிறப்பு அழைப்பு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 350 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
- உலகளாவிய பொருளாதாரம், சர்வதேச நிதி கட்டமைப்பு, நிலையான நிதி, நிதித்துறை, நிதி உள்ளடக்கம் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றிய அமர்வுகள் நடைபெற்றன.
- பிப்ரவரி மாதம், நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வழிகாட்டுதல்படி பல்வேறு குழுக்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
- உக்ரைன் போர், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார சவால்கள் குறித்தும், நிதி நிலைத்தன்மைக்கான சமீபத்திய இடர்பாடுகள் குறித்தும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதி கட்டமைப்பு அமர்வில் உறுப்பினர்கள் ஆலோசித்தார்கள்.