12th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உடற்பயிற்சி கூடம் உரிமம் உள்ளிட்ட 2 சட்ட திருத்த மசோதா அறிமுகம்
- சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதில், 'மக்களின் உடல்நலம், நலவாழ்வை கருத்தில் கொண்டு எளிதாக உடற்பயிற்சி கூடம் தொடங்க வசதியாக, உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் பெறுவதற்கான தேவை நீக்கப்படும் என்று, கடந்த 2022 மே 5-ம் தேதி திருச்சியில் நடந்த 39வது வர்த்தகர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
- இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சென்னை மாநகர காவல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தை, தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் முன்மொழிந்தார்.
- அதற்கான நோக்க காரண விளக்க உரையில், 'நாட்டில் அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்களை கொண்டுள்ளது தமிழகம்.
- எளிதாக பின்பற்றும் வேலைநேரங்களுக்கு சட்டப்பூர்வ வழிவகைகளை உருவாக்குவதால் தொழிலாளர்கள், குறிப்பாக பெண்பணியாளர்களுக்கும், தொழிலகங்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் கிடைக்கும் நன்மைகளை மேற்கோள் காட்டி, பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழில் துறை சங்கங்கள் ஆகியவை வேலைநேர சீர்திருத்தங்களை கொண்டு வர அரசுக்கு விண்ணப்பித்தன.
- இதன் அடிப்படையில், கடந்த 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை மாநிலத்துக்கு பொருந்தும்வகையில் திருத்தம் செய்ய மாநில
- அரசு முடிவெடுத்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களும் பேரவையின் இறுதிவேலை நாளில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
- தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்துள்ளது.
- இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க இலக்கான 6 சதவீதத்துக்குள்ளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதுவே, கடந்த பிப்ரவரியில் 6.44 சதவீதமாக இருந்தது.
- மேலும் கடந்த ஆண்டு மார்ச்சில் சில்லரை விலை பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்ததற்கு, உணவுப் பொருட்கள் விலை குறைந்தது முக்கியமான காரணமாக அமைந்து உள்ளது.
- 'ரெப்போ' வட்டிதேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் 4.79 சதவீதமாக குறைந்துள்ளது.
- இதுவே, பிப்ரவரியில் 5.95 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு மார்ச்சில் 7.68 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
- முதற்கட்டமாக தொடக்க நாளில் ஜெய்பூர்-தில்லி கண்ட்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழக்கமான சேவை ஏப்ரல் 13 அன்று தொடங்கும்.
- இந்த ரயில் அஜ்மீரிலிருந்து ஜெய்பூர், ஆல்வர், குர்கான் வழியே தில்லி கண்ட்டோன்மென்ட் வரை இயக்கப்படும். தில்லி கண்ட்டோன்மென்ட்- அஜ்மீர் இடையேயான தொலைவினை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் அடையும்.
- தற்போது இந்த வழித்தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி 15 நிமிடங்களில் சென்றடைகிறது. அதே வழித்தடத்தில் தற்போது மற்ற ரயில்கள் செல்லும் நேரத்தைவிட 60 நிமிடங்கள் விரைவாக புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்படும். புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை இந்த ரயில் இணைக்கும்.
- குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கடல்சார் தொடர்புகளை உருவாக்கும் முயற்சியில் இந்திய கடற்படையுடன் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் கைகோர்த்துள்ளது.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ராமன் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஆயுதங்கள் மற்றும் மின்னணு அமைப்புமுறை பொறியியல் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
- ஐந்து ஆண்டு காலத்திற்கான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் தருண் சௌரதீப் மற்றும் இந்திய கடற்படையின் மெட்டீரியல் தலைவர் துணை அட்மிரல் சந்தீப் நைதானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- பாதுகாப்பான விண்வெளி தொடர்புகளை நோக்கிய நாட்டின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் குவாண்டம் தகவல் மற்றும் கணினி ஆய்வகம், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.