Type Here to Get Search Results !

11th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


11th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அம்பேத்கர் பிறந்தநாளை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவிப்பு
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. 
  • ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர். சிலர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 
  • இந்நிலையில், மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதியை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 
துடிப்பான கிராமங்கள் திட்டம் இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு
  • வடகிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசத்தை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.சில தினங்களுக்கு முன், அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா சூட்டி உள்ளது.
  • இந்த விவகாரத்தில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' என்ற திட்டத்தை, சில தினங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துவக்கி வைத்தார்.
  • இத்திட்டத்தில், நம் நாட்டு இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • அம்ரித் மஹோத்சவ்வின் கூறியிருப்பதாவது:துடிப்பான கிராமங்கள் திட்டத்தை பற்றி, நம் நாட்டு இளைஞர்கள் அறிந்து கொள்ள, எல்லையோர கிராமங்களுக்கு செல்ல வேண்டும். தற்போது, ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்கள், அருணாச்சல பிரதேசத்தின் கிபித்துா மற்றும் டுட்டிங் கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.
  • மற்றவர்களும், எல்லையோர கிராமங்களுக்கு சென்று, அக்கிராமங்களின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். இது, வடகிழக்கு மாநில மக்களின், வாழ்க்கை முறை, நாட்டுப்புற இசை, அங்கு, வசிக்கும் பழங்குடியினர், அவர்கள் தயாரிக்கும் கைவினை பொருட்கள் அறிந்து கொள்ளவும் உதவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel