7th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாகலாந்து, மேகாலயாவில் பா.ஜ கூட்டணி அரசுகள் பதவி ஏற்பு - கன்ராட் சங்மா, நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வரானார்கள்
- மேகாலயா, நாகலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 தொகுதிகளை ஆளும் தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியது.
- பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜ உள்ளிட்ட பிற கட்சிகள் முதல்வர் கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன.
- இதனால், பாஜவின் இரண்டு எம்எம்ஏக்கள் உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது. அதையடுத்து கான்ராட் சங்மா நேற்று இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
- கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் பாகு சவுகான் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பங்கேற்றனர்.
- நாகலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜ கூட்டணி மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
- இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நெய்பியூ ரியோ தலைமைக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து 60 உறுப்பினர்கள் ஆதரவுடன் நெய்பியூ ரியோ 5வது முறையாக நாகலாந்து முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஆளுநர் இல.கணேசன், முதல்வர் நெய்பியூ ரியோவுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
- இதற்கு முன்பு எஸ்சி ஜமீர் 1980, 1982-86, 1989-90, 1993-2003 வரை முதல்வராக பதவி வகித்தார். அந்த சாதனையை நெய்பியூ ரியோ முறியடித்தார்.
- பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை அடைய வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக இது அமைந்துள்ளது. இதுபோல எல்&டி நிறுவனத்திடமிருந்து ரூ.3,100 கோடிக்கு 3 பயிற்சி கப்பல்களை வாங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டவை (ஐடிடிஎம்) என்ற திட்டத்தின் கீழ் இந்த கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன.
- இந்நிலையில், பாதுகாப்புத் துறைக்கு பயிற்சி போர் விமானங்கள் மற்றும் பயிற்சி கப்பல்கள் வாங்க, எச்ஏஎல் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தனித்தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.9,900 கோடி ஆகும். இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
- இந்த ஒப்பந்தத்தின்படி, 70 எச்டிடி-40 ரக விமானங்களை 6 ஆண்டுகளுக்குள் எச்ஏஎல் தயாரித்து விமானப்படையிடம் ஒப்படைக்கும். விமானப்படையில் சேரும் பைலட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும்.
- எல்&டி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, பயிற்சி கப்பல்கள் தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளியில் தயாரிக்கப்படும். இந்த கப்பல்கள் 2026-ல் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பல்கள் கடற்படை மாலுமிகளுக்கு அடிப்படை பயிற்சி வழங்க பயன்படுத்தப்படும்.
- சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், பெண்களுக்கான சலுகைகளை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
- பாலின இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
- அதன்படி, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும், 250க்கும் அதிகமான ஊழியர்களை உடைய நிறுவனங்களின் நிர்வாக குழுவில், 40 சதவீதம் பெண்களை நியமிக்க வேண்டும்.
- மேலும், தேர்தலில் போட்டியிடுவதிலும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க இந்த சட்டம் வழிவகுக்கும்.
- சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு சம பங்காக இருக்க வேண்டுமெனில், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அவர்கள் பாதிக்கு பாதி அங்கம் வகிக்க வேண்டும்.
- சர்வதேச விமான நிலைய கவுன்சில் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு நடத்தி, சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- அதில், ஆண்டுக்கு 40 கோடிக்கும் அதிகமான பயணியர் பயன்படுத்தும் பிரிவில், 2022ம் ஆண்டுக்கான ஆய்வில், துாய்மை மற்றும் சேவைத் தரம் வாய்ந்த சிறந்த விமான நிலையத்துக்கான விருது, புதுடில்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல, ஆண்டுக்கு 20 லட்சம் பயணியர் பயன்படுத்தும் பிரிவில், தமிழகத்தின் திருச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வு பெற்று உள்ளது.
- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கடந்த 2018ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இரண்டாவது முறையாக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அவர் அந்த பொறுப்பில் மூன்று ஆண்டுகள் அல்லது 60 வயது வரை அல்லது மறு உத்தரவு வரை பதவியில் நீடிப்பார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
- உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இருக்கும் இந்திய விமானப் படையின் போர் பிரிவில் இதுவரை எந்தவொரு பெண்ணும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதில்லை.
- அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் விதமாக முதன்முறையாக இந்திய விமானப் படையின் போர் பிரிவில் தலைமைப் பொறுப்பில் ஷாலிசா தாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்திய விமானப் படையில் விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார் அவர்.
- அவர் மேற்கத்திய செக்டாரில் முன்னணி போர் பிரிவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர். இந்த மாத தொடக்கத்தில், ராணுவம் மருத்துவப் பிரிவுக்கு வெளியே முதல் முறையாக பெண் அதிகாரிகளை கட்டளைப் பணிகளுக்கு நியமிக்கத் தொடங்கியது.
- அவர்களில் சுமார் 50 பேர் செயல்பாட்டு பகுதிகளில் பிரிவுகளுக்கு தலைமை தாங்குவார்கள். இது வடக்கு மற்றும் கிழக்கு கட்டளை பகுதிகளில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.
- தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி எரிபொருள் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. செயற்கோள் ஏவுதளம் அருகே விண்வெளி எரிபொருள் பூங்காவை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மின்னணு, பொறியியல் கட்டமைப்பு மற்றும் வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயன உற்பத்தி செய்ய தொழிற்பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், விண்வெளி தொழில் பூங்கா மற்றும் விண்வெளி எரிபொருள் பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
- தூத்துக்குடி அருகே விண்வெளி சார் தொழிற்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரியது டிட்கோ. விண்வெளி தொழில் பூங்கா மற்றும் எரிபொருள் பூங்காவை அமைகிறது டிட்கோ.
- குலசேகரப்பட்டினம் அருகே இஸ்ரோ, ராக்கெட் ஏவுகளம் அமைக்கும் திட்டத்தை கருத்தில் கொண்டு விண்வெளி சார் தொழிற்பூங்கா அமைகிறது.
- சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் டிட்கோ அறிவித்துள்ளது. அதன்படி, ஆலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.