Type Here to Get Search Results !

5th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


5th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

'நானோ' டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
  • வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், சாகுபடி நடைமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 
  • இதன்படி, இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான 'இப்கோ' சார்பில் குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் கலோலில், நானோ யூரியா ஆலை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 
  • இங்கு 45 கிலோ பாக்கெட் யூரியாவுக்கு பதிலாக 500 மி.லி. அளவில் திரவ யூரியா (நானோ யூரியா) தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் 8 சதவீதம் அளவுக்கு சாகுபடி அதிகரிக்கிறது. இதைத் தொடர்ந்து, கலோலில், நானோ டிஏபி உரம் தயாரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
  • '50 கிலோ எடை கொண்ட டிஏபி உரத்தின் விலை ரூ.4,000. இது விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.1,400-க்கு வழங்கப்படுகிறது. 
  • தற்போது கலோலில் ரூ.250 கோடி செலவில் நானோ டிஏபி உரம் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. 500 மி.லி. நானோ டிஏபி உரம் விவசாயிகளுக்கு ரூ.600 விலையில் வழங்கப்படும்
  • 'நானோ யூரியாவை தொடர்ந்து, நானோ டிஏபி உரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் நானோ டிஏபி உரம் தயாரிக்கப்படுகிறது.
இரானி கோப்பை கிரிக்கெட்  2023 - இதர இந்தியா சாம்பியன்
  • கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இதர இந்தியா முதல் இன்னிங்சில் 484 ரன் குவித்தது. ஈஸ்வரன் 154, ஜெய்ஸ்வால் 213, யஷ் துல் 55 ரன் விளாசினர். 
  • மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 294 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 190 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இதர இந்தியா 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, 437 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி 198 ரன் மட்டுமே சேர்த்து (58.4 ஓவர்) ஆல் அவுட்டானது. 
  • 238 ரன் வித்தியாசத்தில் வென்ற இதர இந்தியா, இரானி கோப்பையை முத்தமிட்டது. முதல் இன்னிங்சில் 213, 2வது இன்னிங்சில் 144 ரன் விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (5.3.2023) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel