3rd March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விநியோக சங்கிலியை மேம்படுத்த வேண்டும் - குவாட் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
- பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
- இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: ஐ.நா. சபையில் சீர்த்திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
- இதற்கு குவாட் கூட்டமைப்பின் இதர 3 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.
- பல்வேறு காரணங்களால் சர்வதேச விநியோக சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தபிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். விநியோக சங்கிலியை மேம்படுத்த வேண்டும்.
- சர்வதேச டிஜிட்டல் துறையில் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன் மையை அதிகரிக்க வேண்டும். மேலும் சர்வதேச அளவில் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்த துறைகளில் குவாட் கூட்டமைப்பு கவனம்செலுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
- குவாட் கூட்டமைப்பு வெளி யிட்ட அறிக்கையில், 'இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் தன்னிச்சையாக எல்லையை மாற்ற அனுமதிக்க முடியாது. இந்த கடல் பகுதிகளில் ஐநா. சபையின் கடல் விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும்.
- பதற்றத்தை அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் சீனக் கடல், கிழக்கு சீனக்கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
- தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:
- காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தவும், தகவமைத்துக் கொள்ளவும் நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை தமிழக அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்துக்கான காலநிலை திட்டத்தை அறிவித்து, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கி, நாட்டுக்கே முன்மாதிரியாக செயல்படுகிறோம்.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் 'காலநிலை ஸ்டுடியோ' அமைக்கப்பட்டு, தமிழகத்துக்கென தனித்துவ மாதிரிகளை உருவாக்கவும், அதற்கான ரேடார்களை நிறுவவும் ரூ.10 கோடி ஒதுக்கி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனைமரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ராம்சர்அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்கள் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தியுள்ளோம்.
- இத்திட்டங்களை ஒருங்கிணைக்க நாட்டிலேயே முதல்முறையாக 'தமிழ்நாடுபசுமை காலநிலை நிறுவனம்' உருவாக்கப்பட்டுள்ளது. 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, என் தலைமையில் 'காலநிலை மாற்ற நிர்வாக குழு' அமைக்கப்பட்டுள்ளது.
- வளர்ச்சி என்பது நீடித்துநிலைப்பதாக இருக்க வேண்டும். இனி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும். 'ஒருங்கிணைந்த நலன்' என்ற கொள்கையைஉறுதியாக எடுத்துக்கொண்டு இந்த அரசு செயல்படுகிறது.
- இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களை கையாள்வதுபோல, வெப்ப அலைகள், புதிய நோய்களை கையாளவும் நாம் தயாராக வேண்டும்.
- ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை சில மாதங்களில் அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதை இக்குழு ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 2070-ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழகத்துக்கு இலக்கை நிர்ணயிக்கும்.
- தமிழகத்தில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'காலநிலை அறிவு இயக்கம்' செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
- இதில் அமைச்சர்கள், மாநிலதிட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சுற்றுச்சூழல் துறைசெயலர் சுப்ரியா சாஹு, மத்திய திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹைம், நிலையான கடலோர மேலாண்மை தேசிய மைய நிறுவன இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுந்தரராஜன், ராம்கோ சமூக சேவைகள் தலைவர் நிர்மலா ராஜா, துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
- கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவ அவசரநிலையை எதிர்கொள்ள தேவையான வசதிகளை மேம்படுத்தவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இதற்காகவே, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை 2021 அக்., மாதம் மத்திய அரசு துவங்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்நிலையில், இத்திட்டத்திற்கு, 8,200 கோடி ரூபாய் கடன் அளிக்க உலக வங்கி முன்வந்து உள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தம் நேற்று இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது.
- மத்திய அரசு தரப்பில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் ரஜத்குமார் மிஸ்ராவும், உலக வங்கி தரப்பில் வங்கியின் இந்தியப்பிரிவு இயக்குனர் ஆகஸ்டி டானோ கோமேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த கடன் தொகை வாயிலாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.