30th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலமாக இருந்து வந்தது.
- இந்நிலையில், இப்பிரச்சனைக்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
- இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும். இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதில் பெரியார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று (மார்ச் 30 ) கொண்டாடப்படுகிறது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
- கடந்த 1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற பின்னர் 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.
- 2000ம் ஆண்டில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்த டி.எஸ். சிவஞானம் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.எஸ். சிவஞானம் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
- இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், அதே உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ். சிவஞானத்தை அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
- இந்நிலையில் நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் (மார்ச் 30) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
- இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24x7 குடிநீர் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
- கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் ரூ.22.50 கோடி மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் அமைக்கப்படும்.
- 3 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
- அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும் ரூ.52.50 கோடியில் 25 புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
- ரூ.150 கோடியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் (ம) பழைய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும்.
- மாநகராட்சிகள், நகராட்சிகளில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்படும் வகையில் 100 பூங்காக்கள் மற்றும் பசுமை இயற்கை வளங்களை மேம்படுத்த ரூ.60.90 கோடி ஒதுக்கீடு.
- மாநகராட்சிகள், நகராட்சிகளில் 400 கி.மீ நீளமுள்ள மண்சாலைகளை தார்சாலை, கான்கிரீட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்த ரூ.288 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு.
- ரூ.345 கோடி மதிப்பீட்டில் 20 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- 10 பேரூராட்சிகளில் ரூ. 25 கோடியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
- நிலத்தடி நீரை பாதுகாக்கும் வண்ணம், முதற்கட்டமாக ரூ.50 கோடியில் 20 பேரூராட்சிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படும்.
- ரூ.50 கோடியில் 100 நீர்நிலைகள், பேரூராட்சிகளில் மேம்படுத்தப்படும்.
- பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு ரூ.7 லட்சம் செலவில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்.
- தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில், ராணுவத்திற்காக தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் சமவெளிகளைக் கண்டறியும் 12 ரேடார் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.9,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மார்ச் 30, 2023) கையெழுத்திட்டது.
- தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை (ஏடபிள்யூஎஸ்) கொள்முதலுக்கான ஒப்பந்தமானது பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது.
- இதன் மதிப்பு ரூ.8,160 கோடியாகும். இந்த ஆயுதங்கள் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், தரையிலிருந்து உதவும் கருவிகள் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
- ஆகாஷ் ஆயுத முறை (ஏடபிள்யூஎஸ்) என்பது நிலத்திலிருந்து வான்வழி நோக்கி குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் தன்மை படைத்த வான்வழிப்பாதுகாப்பு முறையாகும். இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வான்வழி ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த (ஏடபிள்யூஎஸ்) தரம் உயர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு எல்லைகளில் ராணுவப் பயன்பாட்டிற்காக இவை கொள்முதல் செய்யப்படுகின்றன.
- தற்சார்பு இந்தியா என்ற இலக்கை வலப்படுத்தும் நடவடிக்கையாக, 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்று (2023 மார்ச் 30) கையெழுத்திட்டுள்ளது.
- 11 அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்து கப்பல்களை வாங்க கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (ஜிஎஸ்எல்) மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் (ஜிஆர்எஸ்இ) நிறுவனங்களுடன் ரூ. 9,781 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்த 11 கப்பல்களில் 7 கப்பல்கள் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மூலமாகவும், 4 கப்பல்கள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தின் மூலமாகவும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளன.
- இந்த கப்பல்கள் 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல்களை (என்ஜிஎம்இ) வடிவமைக்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (சிஎஸ்எல்) ரூ. 9,805 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கப்பல்கள் 2027 மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய ஏதுவாக கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு முறை என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.
- இந்த 4-ம் தலைமுறை உபகரணம் கோவா, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் புதிய தலைமுறை கரையோர ரோந்து கப்பலில் பொருத்தப்பட உள்ளது.