Type Here to Get Search Results !

29th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


29th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு ஒன்றிய அரசு விருது
  • ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாத் தலங்களில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு வளமான சுற்றுலா அனுபவத்தை பெறவும், கருப்பொருள் சார்ந்த சுற்றுலா சுற்றுக்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு 'சுவதேஷ் தர்ஷன்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 
  • இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை (மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை), மாமல்லபுரம் கடற்கரை, ராமேஸ்வரம் கடற்கரை, குலசேகரபட்டினம் கடற்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, திரிவேணி சங்கமம் கடற்கரை, தெற்குறிச்சி கடற்கரை, மணக்குடி கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்கள் தேர்வு செய்யப்பட்டன. இத்திட்டத்தில் ரூ.73.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இந்த கடற்கரை சுற்றுலாத் தலங்களில் நிலச்சீரமைப்பு, மின்விளக்குகள் வசதி அமைத்தல், சுற்றுலா தகவல் மையம், பொது கழிப்பிடங்கள் உருவாக்குதல், நடைபாதை வசதிகள், நடைபாதை மேம்பாடு, கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாடு, மீட்புப் படகுகள், கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரம், ஜெட் ஸ்கி படகு, நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம், 'வை-பை' கம்பியில்லா இணைய அலை வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தகவல் பலகைகள், முதலுதவி வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
  • இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரையின் அனைத்து பணிகளுக்கும் கடற்கரை முகப்பு மேம்பாட்டு பணிகள் உட்பட ரூ.12.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. 
  • இக்கடற்கரை முகப்பு மேம்பாட்டு பணிகள் அங்கு வருகைப்புரியும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை கண்டு ரசிக்கவும் இளைப்பாறவும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 
  • தற்பொழுது இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் ஒருங்கிணைப்பு மற்றும் பொது தனியார் துறை கூட்டாண்மை குறித்த தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. 
  • இப்பயிலரங்கத்தில், ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கிய விருதினை சுற்றுலாத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்தரமோகன் பெற்றுக் கொண்டார்.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்
  • தமிழக சட்டசபையில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கடந்த 1.9.2021 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
  • அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் சமுதாயத்தில் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராகவும், சமூக நல இயக்குனரை உறுப்பினர் செயலாளராகவும் கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை உருவாக்க ஆணையிடப்பட்டு உள்ளது.
  • இந்த வாரியத்தின் அலுவல்சார் உறுப்பினர்களாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர், தி.மு..க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, எம்.எல்.ஏ. வரலட்சுமி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (அல்லது அவரது பிரதிநிதி), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குனர் (சென்னை), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் (சென்னை) ஆகியோர் பணியாற்றுவார்கள்.
  • அலுவல் சாரா உறுப்பினர்களாக 14 பேர் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டனர். அதன்படி, சக்தி மசாலா நிறுவன இயக்குநர் சாந்தி துரைசாமி, ரேணுகா ஆலிவர், ரேவதி அழகர்சாமி உள்பட 14 பேரை அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்படுகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டம் சண்டிகரில் தொடங்கியது
  • ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டம் சண்டிகரில் (2023 மார்ச் 29) தொடங்கியது. 31 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel