28th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அர்ச்சனா
- இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன்.
- இதில் 100 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அவர் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தை 11.52 நொடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 23.21 நொடிகளிலும் அவர் கடந்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை காட்டிலும் 0.22 நொடிகள் முன்னிலையில் பந்தய தூரத்தை அர்ச்சனா கடந்துள்ளார்.
- கடந்த 2019 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் மகளிர் பிரிவில் பங்கேற்றிருந்தார். 2019 தெற்காசிய போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான அவர் மதுரையை சேர்ந்தவர்.
- ஜி20 அமைப்பின் கலாச்சார பணிக்குழு சார்பில் கலாச்சார பாதுகாப்பு குறித்த உலகளாவிய இணையதள கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
- யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கலாச்சாரம் சார்ந்த பொக்கிஷங்களை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
- கருத்தரங்கில், நீண்ட கால பிரச்சனையான சட்டவிரோத கடத்தல் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாத்தல் குறித்து 28 நாடுகளைச் சேர்ந்த 40 நிபுணர்கள் ஒருங்கிணைந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
- ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் 12 சர்வதேச அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.
- மேலும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதற்கு ஏதுவாக இடர்பாடு மேலாண்மை, அவசர கால நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் இணையதளம் வாயிலான வர்த்தகத்தில் உள்ள சவால்கள் குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- இதேபோல் இணையதள வர்த்தகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் எனவும் இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
- இதைத்தொடர்ந்து, நான்கு உலகளாவிய இணைய தள கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இந்த கருத்தரங்குகள் வரும், ஏப்ரல் 13,19 மற்றும் 20ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
- ஜி20 அமைப்பின் இரண்டாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் இரண்டாவது நாளாக காந்திநகரில் நடைபெற்றது.
- தொடக்க அமர்வை தொடர்ந்து முதலாவது தொழில்நுட்ப அமர்வு நடைபெற்றது. இதில் நீர்வள மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் சுழற்சி பொருளாதாரம் தொடர்பாக இரண்டாவது அமர்வு நடைபெற்றது.
- ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நாடுகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு துணை கருப்பொருள்கள் குறித்தும் விரிவாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.