Type Here to Get Search Results !

ஹாக்கி இந்தியா விருதுகள் 2022 / HOCKEY INDIA AWARDS 2022

  • ஹாக்கி இந்தியா விருதுகள் 2022 / HOCKEY INDIA AWARDS 2022: ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை மிட்ஃபீல்டா் ஹாா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை கோல்கீப்பா் சவிதா புனியாவும் வென்றனா். 
  • ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை மிட்ஃபீல்டா் ஹாா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை கோல்கீப்பா் சவிதா புனியாவும் வென்றனா்.
  • தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்கள் இருவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலான வெற்றியாளா்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. ஹாா்திக், சவிதாவுக்கு தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. 
  • ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலடித்த தமிழக வீரா் காா்த்தி செல்வத்துக்கு, அறிமுக ஆட்டத்திலேயே கோலடித்ததற்கான விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. 
  • ஒடிஸாவில் ஜனவரியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாா்திக் சிங், காயம் காரணமாக பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளானாா்.
  • மறுபுறம், சவிதா தலைமையிலான இந்திய அணி கடந்த டிசம்பரில் நேஷன்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியனாகி, மகளிா் புரோ லீக் போட்டிக்கும் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. 
  • 1964 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணியைச் சோந்த குருபக்ஸ் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளா் விருதும், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. 
  • சிறந்த வளா்ந்து வரும் வீரா் விருதை உத்தம் சிங்கும், சிறந்த வளா்ந்து வரும் வீராங்கனை விருதை மும்தாஸ் கானும் (தலா ரூ.10 லட்சம்) பெற்றனா். 
  • சிறந்த ஃபாா்வா்ட் விருது வந்தனா கட்டாரியாவுக்கும், சிறந்த மிட்ஃபீல்டருக்கான விருது சுஷிலா சானு புக்ரம்பமுக்கும், சிறந்த டிஃபெண்டா் விருது ஹா்மன்பிரீத் சிங்குக்கும், சிறந்த கோல்கீப்பா் விருது கிருஷண் பகதூா் பதக்கிற்கும் (தலா ரூ.5 லட்சம்) வழங்கப்பட்டன.

ENGLISH

  • Midfielder Harthik Singh won the Hockey India Player of the Year 2022 award and goalkeeper Savita Punia won the Player of the Year award. Midfielder Harthik Singh won the Hockey India Player of the Year 2022 award and goalkeeper Savita Punia won the Player of the Year award.
  • Awards were also presented to the winners of various categories, including Avala Iruva, at a function held in Delhi on Friday. Hardik and Savita were also given a cash prize of Rs.25 lakh each. 
  • Tamil Nadu player Karthi Selva, who scored a goal in the match against Pakistan in the Asia Cup, was awarded the award for scoring a goal in the debut match and a cash prize of Rs.1 lakh. Hardik Singh, who played well in the Hockey World Cup held in Odisha in January, had to pull out of the tournament halfway due to injury.
  • On the other hand, the Indian team led by Savita won the Nations Cup last December and qualified for the Women's Pro League. Sonda Gurupax Singh, who captained the Indian hockey team to gold in the 1964 Tokyo Olympics, was awarded the Lifetime Achievement Award and a cash prize of Rs 30 lakh. 
  • The Best Emerging Player Award was given to Uttam Singh and the Best Emerging Player Award to Mumtaz Khan (Rs. 10 lakh each). Best Forward Award went to Vandana Kataria, Best Midfielder Award to Sushila Sanu Pukhrambham, Best Defender Award to Hammanpreet Singh and Best Goalkeeper Award to Krishan Bahadur Pathak (Rs. 5 lakh each).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel