இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை 2021 / INDIA FOREST STATUS REPORT 2021
TNPSCSHOUTERSMarch 16, 2023
0
இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை 2021 / INDIA FOREST STATUS REPORT 2021: இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை 2021ன் படி நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பு 2261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.
டேராடூனில் உள்ள இந்திய காடுகள் கணக்கெடுப்பு அமைப்பு 1987ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பை நடத்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
2021ம் ஆண்டு ஆய்வின்படி நாட்டில் மொத்த வனப்பரப்பு 7,13,789 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 21.72% ஆகும்.
2019ம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் காடுகளின் பரப்பளவு 1540 சதுர கிலோ மீட்டரும், மரங்களின் பரப்பளவு 721 சதுர கிலோ மீட்டரும் அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் 2 ஆண்டுகளில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு மொத்தம் 2261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.
காடுகளின் பரப்பளவு மற்றும் பசுமை பரப்பளவை அதிகரிக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதுடன் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தேசிய மூங்கில் இயக்கம், வேளாண் காடுகளுக்கான துணை இயக்கம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் காடுகள் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மூலமாகவும், அரசுசார அமைப்புகள் மூலமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாகவும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதில் நல்ல பலனைத் தந்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,060 சதுர கிலோ மீட்டராகவும், இதில் காடுகளின் பரப்பளவு 26,419 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது.
மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் இது 20.31% ஆகும். 2019 ஆண்டை ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் மாநிலத்தின் வனப் பரப்பு 0.21% அதிகரித்துள்ளது.
ENGLISH
INDIA FOREST STATUS REPORT 2021: According to India's Forest Status Report 2021, the country's total forest and tree cover has increased by 2261 sq km. The Forest Survey of India at Dehradun has been conducting this survey every 2 years since 1987 and publishing the report.
According to the 2021 survey, the total forest area in the country is 7,13,789 square kilometers. It is 21.72% of the total land area of the country. Compared to the 2019 census, the forest area has increased by 1540 square kilometers and the tree area by 721 square kilometers. At the national level, the forest and tree cover has increased by a total of 2261 sq km in 2 years.
The Union Ministry of Environment has been providing financial assistance to the State and Union Territory Governments and implementing various schemes to increase forest cover and green cover.
Efforts are also being made to increase forest cover through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, the National Bamboo Movement, and the Subsidiary Movement for Agroforestry.
Planting of saplings is carried out through various departments of central and state governments, non-governmental organizations and corporate organizations. Such measures have yielded good results in increasing the area of forests and trees.
As far as Tamil Nadu is concerned, the total area of the state is 1,30,060 sq km, of which the forest area is 26,419 sq km. It is 20.31% of the total area of the state. The forest area of the state increased by 0.21% in 2021 as compared to 2019.