19th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல்முறையாக அந்நிய நேரடி முதலீடு
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
- அதன்ஒரு பகுதியாக, நேரடி அந்திய முதலீட்டின்கீழ், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வணிக வளாகமும், பன்னோக்கு கோபுரமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, துபாயின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான புர்ஜ் கலிபா, துபாய் வணிக வளாகங்களை அழகுற கட்டிய எம்மார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- இதற்காக ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. வணிக வளாகம், பன்னோக்கு உயர் கோபுரங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் விவேக் ஓபராய், நீது சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆசிய தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஜப்பானின் நோமி பகுதியில் ஆசிய ரேஸ் வாக்கிங் சாமியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த இந்த தடகளப் போட்டி கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் தற்போது நடத்தப்பட்டுள்ளது.
- இதில் இந்தியா சார்பில், ஆண்களுக்கான 20 கிமீ பிரிவில் அக்ஷ்தீப் சிங், சூரஜ் பன்வார், விகாஸ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட், ஹர்தீப் சிங் ஆகியோரும், பெண்களுக்கான 20 கிமீ பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி, பாவ்னா ஜாட், சோனல் சுக்வால், முனிடா ப்ரஜாபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- இதில், ஆண்களுக்கான 20 கிமீ பிரிவில் இந்தியாவின் சார்பில் அக்ஷ்தீப் சிங் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான 20 பிரிவில் கலந்து கொண்ட பிரியங்கா கோஸ்வாமி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- இந்த தொடரில் தங்க பதக்கம் வென்ற அக்ஷ்தீப் சிங் ஏற்கனவே, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். ராஞ்சியில் நடைபெற்ற தேசிய ஓபன் ரேஸ் வாக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர் 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 19 நிமிடங்கள் 55 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
- இது தேசிய சாதனையாகவும் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
- மேலும் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி உலக் சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, விகாஸ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட் ஆகியோரும் உலக சாம்பியன்ஷீப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2023 மார்ச் 19-ம் தேதியன்று, இந்தியா - மாலத்தீவு இடையிலான 4-வது பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை (டிசிடி) மாலேயில் நடைபெற்றது.
- இதில், மத்திய பாதுகாப்புத்துறைச் செயலர் திரு.கிரிதர் அரமானே, மாலத்தீவு பாதுகாப்புத்துறைச் செயலர், மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் அது குறித்து திருப்தி தெரிவித்தனர்.
- தற்போதுள்ள இருதரப்புப் பயிற்சிகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட நிலையில், இந்தப் பயிற்சிகளின் கடினத் தன்மையை அதிகரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.