16th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ.70,500 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் - பாதுகாப்புத் துறை ஒப்புதல்
- பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்குகிறது.
- இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.70,500 கோடி மதிப்புக்கு மேலான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி ராணுவத்துக்கு 307 நவீன பீரங்கிகள் (ஏடிஏஜிஎஸ்) ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்திடம் (டிஆர்டிஓ) வாங்கப்படவுள்ளன.
- கடற்படை பயன்பாட்டுக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணைகள், ரூ.56,000 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் போர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- விமானப்படையின் சுகாய் ரக போர்விமானத்தில் பயன்படுத்தக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.2,71,538 கோடிக்கு போர் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதில் 98.9 சதவீதம் இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய - சீனஎல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- சந்திராயன்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இன்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- பிப்ரவரி 24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தின் உயர் ரக சோதனை மையத்தில் 25 வினாடிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு கிரையோஜெனிக் இன்ஜின் வெப்ப சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
- இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் சோதனை, ஏவப்பட்ட பிறகு அதன் இயக்கத்தன்மை, செயல்பாடுகளின் முக்கியமான கட்டம் என தெரிவிக்கப்படுகிறது.
- இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டுக் கடற்படைப் போர்ப் பயிற்சி லா பெரோஸ் 2023 மார்ச்-13 மற்றும் 14ம் தேதிகளில் இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கடற்படைப் போர்ப்பயிற்சி 2019ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
- 3-ம் ஆண்டான இந்த ஆண்டில், இந்தியாவின் சார்பில் ஐஎன்எஸ் சஹாயத்ரி மற்றும் ஐஎன்எஸ் ஜோதி கப்பல்கள் பங்கேற்றன.
- ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் ஹெச்எம்ஏஎஸ் பெர்த் கப்பலும், பிரான்ஸ் கடற்படை சார்பில் எஃப்எஸ் டிக்ஸ்மூட் மற்றும் எஃப்எஸ் லால் ஃபயட் கப்பல்களும், ஜப்பான் கடற்படை சார்பில் ஜெ எம்எஸ்டிஃஎப் சுசுட்ஸ்கி கப்பலும், அமெரிக்கா சார்பில் யுஎஸ்எஸ் சார்லெஸ்டன் கப்பலும் இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சியில் பங்கேற்றன. இது தவிர, ஹெலிகாப்டர்களும், போர்ப்பயிற்சியில் பங்கேற்றன.
- இந்த இரண்டு நாள் பயிற்சியில் கடல் பரப்புப் போர்ப்பயிற்சிகள், வான்வெளி தாக்குதல் தடுப்பு பயிற்சிகள், ஹெலிகாப்டர் இயக்க செயல்பாடுகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் வகையில், இந்தப் போர்ப்பயிற்சி அமைந்திருந்தது.