10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மார்ச் 17ம் தேதி முதல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
நுழைவு சீட்டை அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
மார்ச் 20 முதல் மார்ச் 24-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைப்பெற உள்ளது. செய்முறை தேர்வு குறித்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தனித்தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.