Type Here to Get Search Results !

UNION BUDGET 2023 - 2024 / மத்திய பட்ஜெட் 2023 - 2024

 • UNION BUDGET 2023 - 2024 / மத்திய பட்ஜெட் 2023 - 2024: 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
 • அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். 
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சங்கள்
 • மத்திய பட்ஜெட்டில் சப்தரிஷி முன்னுரிமைகள்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி நபரையும் சென்றடைவது, முதலீடு மற்றும் கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதித்துறை.
 • தனிநபர் ஆண்டு வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
 • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 27 கோடியாக உயர்வு.
 • உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.
 • நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீத அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 • வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
 • உலகளவில் 10-வது இடத்திலிருந்து கடற்த 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 • உலகத்தரத்துடன் கூடிய தனித்துவம் வாய்ந்த டிஜிட்டல் புது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்.
 • கொரோனா தொற்றின் போது ஒருவர் கூட பசியுடன் உறங்கச்செல்லக் கூடாது என்ற நிலை உறுதிசெய்யப்பட்டது.
 • 220 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி 102 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
 • பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அடுத்த ஓராண்டிற்கு பொதுமக்களுக்கு வீடுகள் வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமை.
 • உலகளவில் 10-வது இடத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 • தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
 • 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
 • பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது
 • கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு.
 • 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
 • 2047-ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 • சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • உயர் மதிப்பிலான தோட்டப்பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் விதை நேர்த்தி செய்தல், தரமான நடவுக்கருவிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு ரூ.2,200 கோடி நிதிஒதுக்கீடு
 • இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், முன்னுரிமை துறையில் நிலவும் கடன் பற்றாக்குறையை களைய தேசிய வீட்டுவசதி வங்கி மூலமாக நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்படும்.
 • ஆன்லைன் மூலம் ஆவணங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாக சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புகள் ஆகியவை பயன்படுத்தும் வகையில் டிஜி லாக்கர் முறை வலுப்படுத்தப்படும்.
 • புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் 5ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான செயலி உருவாக்கங்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 100 ஆய்வகங்களை ஏற்படுத்த முடிவு.
 • இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒருகோடி விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முடிவு. இதற்காக 10,000 உயிரி உள்ளீட்டு ஆதார மையங்கள் அமைக்கப்படும்.
 • 30 திறன் இந்தியா சர்வதேச மையங்கள் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களின் திறனை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் அமைக்கப்படும்.
 • நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்படும் பல்வேறு படிவங்களை கையாண்டு விரைவாக மதிப்பீடு செய்ய மத்திய செயலாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும்.
 • ஊரகப்பகுதிகளில் இளம் தொழில்முனைவோர் விவசாயம் தொடர்பான புத்தொழில்களை நிறுவ ஊக்கம் அளிக்கும் வகையில் வேளாண் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நிதியம் உருவாக்கப்படும்.
 • இந்தியாவை சிறுதானியங்களின் உலகளாவிய மையமாக உருவாக்க ஹைதராபாதில் உள்ள இந்திய சிறுதானிய ஆய்வு மையத்திற்கு ஆதரவு அளிக்கப்படும்.
 • கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி வேளாண் கடன் வசதி.
 • பிரதமரின் மீன்வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ஒரு துணை திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.6,000 கோடி முதலீட்டில் மீனவர், மீன் விற்பனையாளர் மற்றும் சிறு நிறுவனங்கள் ஆகியோருக்கு உதவிகள் வழங்கவும், மதிப்புக்கூட்டு சங்கிலித் தொடரை விரிவாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
 • விவசாயிகளை முன்னிலைப்படுத்திய தீர்வுகளுக்கும், விவசாய தொழில்நுட்ப தொழில்துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வேளாண் துறைக்கான டிஜிட்டல் பொது கட்டமைப்பு உருவாக்கம்.
 • 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் ரூ.2,516 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்.
 • ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பொது தனியார் மருத்துவ ஆய்வுகளுக்கு ஊக்கம்.
 • மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
 • வளர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், தனியார் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யவும் மூலதன முதலீடுகள் ரூ.10 லட்சம் கோடி வரை ஆண்டுதோறும் 33 சதவீத அளவில் தொடர்ந்து 3-வது முறையாக அதிகரிப்பு.
 • சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியமான அரசு சேவைகளை முழுமையான அளவில் வழங்கும் முன்னேற துடிக்கும் வட்டாரங்களுக்கான வளர்ச்சித் திட்டம். முதற்கட்டமாக 500 வட்டாரங்களுக்கு அறிமுகம்.
 • மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டமான பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள பழங்குடியின மக்களுக்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு.
 • கட்டமைப்பு துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உள்கட்டமைப்பு நிதிச்செயலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 • ஆசிரியர் பயிற்சியில் துடிப்பான செயல்திறன் மிக்க நிறுவனங்களாக மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
 • ரூ.5,300 கோடி மத்திய அரசின் நிதியுதவியில் நுண்ணீர் பாசன மேம்பாட்டுத் திட்டம்.
 • ஒரு லட்சத்திற்கும் அதிகமான பழங்கால கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கி நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் காட்சிப்படுத்தும் கல்வெட்டுகளுக்கான பாரத் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
 • மத்திய அரசின் மூலதன செலவினங்கள் ரூ.13.7 லட்சம் கோடியாக இருக்கும்.
 • நீடித்த தன்மையுடன் கூடிய எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நகரங்களாக உருவாக்கும் வகையில் நகர்ப்புற சீர்திருத்தங்கள் மற்றும் செயலாக்கங்களை மேற்கொள்ள மாநிலங்களுக்கும், நகரங்களுக்கும் ஊக்குவிப்பு.
 • மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற அனைத்து பெரு நகரங்களிலும், நகர்ப்புறப் பகுதிகளிலும் 100 சதவீத இயந்திரப் பயன்பாட்டை உறுதிசெய்ய முடிவு.
 • லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தி மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள தொடர் கற்றல் வாய்ப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த ஆன்லைன் பயிற்சி தளம் ஐஜிஓடி கர்மயோகி தொடங்கப்பட்டுள்ளது.
 • வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கப்பட்டு, 3,400 சட்ட விதிமுறைகள் குற்றமற்றவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
 • நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதிப்படுத்த 42 மத்திய சட்டங்களில் திருத்தம் செய்து ஜன் நம்பிக்கை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 • ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவும், திருத்தங்கள் செய்யவும் தனிநபர் டிஜிலாக்கர் சேவை எனும் ஒற்றை நிறுத்தத் தீர்வு அறிமுகம்.
 • பெருங்தொற்று காலத்தில் ஒப்பந்தங்களை நிறைவேற்ற இயலாத சிறு குறு ஒப்பந்த நிறுவனங்களுக்கு அவற்றின் பிணை தொகையில் 95 சதவீதம் அல்லது செயல்திறன் உத்தரவாத தொகை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் திருப்பி வழங்கப்படும்.
 • வளர்ச்சித் தேவைகளை சமாளிப்பதற்காக குறைவான நிதி ஆதார பிரச்சினையை சமாளிக்கும் விதமாக சிறப்பாக சேவையாற்றும் நிறுவனங்களை கண்டறிந்து நிதியுதவி அளிக்கும் திட்டம்.
 • மூன்றாம் கட்ட மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க 7,000 கோடி நிதி ஒதுக்கீடு.
 • இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் துறைக்கு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி.
 • படிம எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், குறைந்த கார்பன் உமிழ்வை உறுதி செய்யவும், 2030 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கு.
 • எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு.
 • நீடித்த வளர்ச்சிப்பாதை குறித்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க மின்கல எரிசக்தி சேமிப்பு முறைமைகள்.
 • லடாக் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொகுப்புக்கு ரூ.20,700 கோடி ஒதுக்கீடு.
 • மாற்று உரங்கள், சமச்சீரான ரசாயன உரங்களை பயன்படுத்தும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க பிரதமர் - பிரணாம் திட்டம் தொடங்கப்படும்.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பசுமை கடன் திட்டம் அறிவிக்கப்படும்.
 • உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க குறைந்தபட்சம் 50 சுற்றுலாத்தலங்கள் தேர்வு செய்யப்படும்.
 • 'நம் நாட்டை காணுங்கள்' முன்முயற்சியை எட்ட குறிப்பிட்ட துறையில் பயிற்சி மற்றும் தொழில்முனைவு மேம்பாடு மேற்கொள்ளப்படும்.
 • எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
 • மாநில தலைநகர்களிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி பொருள் என்பதை வலியுறுத்தும் ஒருங்கிணைந்த வணிக வளாக மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 • கிஃப்ட் ஐஎஃப்எஸ்சியில் தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 • சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தின்கீழ் அதிகாரங்களை சர்வதேச நிதி சேவை ஆணையத்திற்கு வழங்குவதன் மூலம் இரட்டை கட்டுப்பாடு தவிர்க்கப்படும்.
 • ஆர்பிஐ, செபி, ஐஆர்டிஏஐ, ஐஎஃப்எஸ்சிஏ போன்றவற்றின் அனுமதி மற்றும் பதிவுக்காக ஒற்றைச்சாளர தகவல் தொழில்நுட்ப முறைமை அமைப்பு.
 • அந்நிய வங்கிக்கு ஐஎஃப்எஸ்சி வங்கி அலகுகளை வாங்க அனுமதித்தல்.
 • வர்த்தக மறு முதலீட்டுக்காக ஏற்றுமதி, இறக்குமதி வங்கி கிளையை உருவாக்குதல்.
 • பங்குச்சந்தை நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
 • முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் வாயிலாக உரிமை கோரப்படாத பங்குகள் மற்றும் நிதி அளிக்கப்படாத ஈவுத்தொகை ஆகியவற்றை எளிதாகக் கோருவதற்கு ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளம்.
 • ஒரேமுறை முதலீடு செய்யக்கூடிய புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்ட சான்றிதழ் தொடங்கப்படவுள்ளது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு தொடங்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வைப்புத்தொகையாக சேமிக்க இயலும். மார்ச் 2025 வரை அமலில் இருக்கக் கூடிய இந்தத்திட்டத்தின்கீழ் 7.5 சதவீத வட்டி வழங்கப்படும்.
 • பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தனியார் முதலீடுகள் அனைத்து துறைகளிலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 • வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
 • குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.
 • மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
 • 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
 • ரயில்வே துறை மேம்பாட்டிற்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
 • வாடிக்கையாளரை அடையாளம் காணும் நடைமுறை KYC எளிமைப்படுத்தப்படும்.
 • 740 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
 • ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.
 • கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம்.
 • இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கையில் அம்ரித் பிதி திட்டம்.
 • புதிய பழகுநர் திட்டத்தின்கீழ் 47 லட்சம் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி.
 • தேசிய நிதித்தரவுகள் பதிவேடு ஏற்படுத்தப்படும்

 • பொது கட்டமைப்புக்கான கடன் நிர்வாக நடைமுறைகளுக்கான சட்டம் கொண்டுவரப்படும்.
 • ஏற்கனவே உள்ள வங்கிகள் சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
 • டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முழு அளவிலான ஆதரவு
 • 2022 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 76 சதவீதம் அதிகரிப்பு. பரிவர்த்தனை மதிப்பு 91 சதவீதமாக அதிகரிப்பு.
 • மூத்த குடிமக்களுக்கான உச்சபட்ச டெபாசிட் 15 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிப்பு.
 • மாத வருமானம் கொண்ட வைப்புத் தொகைக்கான உச்சவரம்பு 4.5 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சமாக அதிகரிப்பு.
 • மாநிலங்களுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.5 சதவீதம் அளவிற்கு பற்றாக்குறையை பராமரிக்க அனுமதி. இது 2024-26 ஆண்டுகளில் 5 சதவீதம் வரை பராமரிக்க அனுமதி.
 • கர்நாடக மாநிலத்திற்கு 5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி
 • சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.9000 கோடி தொகுப்பு நிதி.
 • மகளிருக்கான சேமிப்புத் திட்டம் மார்ச் 2025 வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
 • முக்கிய இடங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகள் நிறுவப்படும்
 • 2047 க்குள் அரிவாள் வடிவ செல் இரத்த சோகையை அகற்றுவதற்கான பணி தொடங்கப்படும். பாதிக்கப்பட்ட பழங்குடியின பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
 • கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
 • புதுமையான கற்பித்தல், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு மற்றும் ICT செயல்படுத்தல் மூலம் ஆசிரியர்களின் பயிற்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்; மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் துடிப்பான சிறந்த நிறுவனங்களாக உருவாக்கப்படும்.
 • தேசிய கல்விக் கொள்கை (NEP2020), கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றலில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான உத்திகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
 • திருத்திய மதிப்பீடுகள்: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.24.3 லட்சம் கோடி. இதில் நிகர வரி வருவாய் ரூ.20.9 லட்சம் கோடி. ஒட்டுமொத்த செலவினம் ரூ.41.9 லட்சம் கோடி. இதில் மூலதனச் செலவு ரூ.7.3 லட்சம் கோடி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 6.4 சதவீதம்.
 • பட்ஜெட் மதிப்பீடுகள்: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.27.2 லட்சம் கோடி. ஒட்டுமொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடி. நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடி. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதம். பங்குப் பத்திரங்கள் மூலம் கடன்கள் ரூ.11.8 லட்சம் கோடி. ஒட்டுமொத்த சந்தை கடன்கள் ரூ.15.4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 • நேரடி வரிகள்: வரி விதிப்பில் தொடர்ச்சியையும், நிலைத்தன்மையையும் நோக்கமாகக் கொண்டு நேரடி வரிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இணக்க சுமையை குறைக்கும் வகையில் வரி விதிப்பை எளிதாக்கி, சீரமைப்பதுடன், தொழில்முனைவு உணர்வை ஊக்குவிக்க மக்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்படுகிறது.
 • வரி செலுத்துவோருக்கான சேவைகளை இணக்க எளிமை மற்றும் சுமூக தன்மையுடன் மாற்ற வருமான வரித்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
 • வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேலும் முன்னேற்ற, அடுத்த தலைமுறை பொது வருமான வரி அறிக்கை தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
 • புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை. முன்னதாக இது ரூ.5 லட்சமாக இருந்தது.
 • 2020-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி திட்டத்தின்கீழ், 6 வருமான படி நிலைகள் இருந்தன. இவை தற்போது 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
 • ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை
 • ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம்
 • ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம்
 • ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம்
 • ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம்
 • ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்
 • புதிய தனிநபர் வருமான வரி திட்ட நடைமுறையில் ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு ரூ.50,000 நிலையான கழிவுத்தொகை அறிமுகம். குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.15,000 கழிவு அறிமுகம்.
 • அதிகபட்ச கூடுதல் வரி விகிதம் 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பு. தனிநபருக்கான உச்சபட்ச வருமான வரி விகிதம் ஏற்கனவே உள்ளதிலிருந்து 39 சதவீதமாகக் குறைகிறது.
 • அரசு சாரா பணியில் இருக்கும் ஊதியம் பெறுவோருக்கு விடுப்பு பணமாக்கல் மீதான வரிவிலக்கு வரம்பு ரூ.25 லட்சம் வரை அதிகரிப்பு.
 • பொதுவாக புதிய வருமான வரி முறையே தேர்வாக இருக்கும். ஆனால், விருப்பப்படுவோர் பழைய வருமான வரி முறையை தெரிவு செய்து அறிவிக்க வேண்டும்.
 • குறு நிறுவனங்களுக்கும், சில தொழில்முறை வல்லுநர்களுக்கும் அனுமானம் அடைப்படையிலான வரி செலுத்துவதற்கான உச்சவரம்பை அதிகரிப்பதன் மூலம் பயனடைய இயலும்.
 • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் கொள்முதல் செய்து குறித்த நேரத்தில் அதற்குரிய தொகையை செலுத்தியிருந்தால், அது செலவினமாக எடுத்துக்கொள்ளப்படும்.
 • உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச வரி விகிதமான 15 சதவீதம் மார்ச் 2024 வரை உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கும் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
 • கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி ஆலைகள் 201_17 மதிப்பீட்டு ஆண்டுக்கு முன்னதாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிய தொகையை செலவீனமாக காட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.10,000 கோடி நிவாரணம் கிடைக்கும்.
 • கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு ரொக்க வைப்புத் தொகையாக ரூ.2 லட்சம் வரை உச்சவரம்பு அளிக்கும் பிரிவும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளில் பெற்ற கடனில் ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக திருப்பி செலுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.
 • கூட்டுறவு சங்கங்களில் ரொக்கமாக பணம் எடுப்பதற்கு வரி பிடித்த உச்சவரம்பு ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • புதிய புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வருமான வரி சலுகைகள் மார்ச் 2024 வரை நீட்டிப்பு.
 • புத்தொழில் நிறுவனங்கள் தங்களது நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கான காலம் 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிப்பு.
 • குடியிருப்புகளுக்கான முதலீட்டு ஆதாயத்திலிருந்தான கழிவு பிரிவு 54 மற்றும் 54-எஃப் பிரிவின் கீழ், உச்சவரம்பு ரூ.10 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • 2023 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு செலுத்தப்படும் உயர் மதிப்பிலான காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகையில் ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு பெற அனுமதி.
 • பெரு நகரங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளின் மேம்பாடு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் மத்திய மாநில அரசுகளின் ஆணையங்கள் மற்றும் வாரியங்களின் வருமானங்களுக்கு வரிவிலக்கு.
 • ஆன்லைன் விளையாட்டுகளுக்கான குறைந்தபட்ச வருமான வரி பிடித்தம் செய்வதற்கான தொகை ரூ.10,000 ஆக நிர்ணயம்.
 • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்பப்பெறும் போது பான் அட்டை இல்லாதவர்களுக்கு வருமான வரி பிடித்தம் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக்குறைப்பு.
 • சந்தை இணைப்பு கொண்ட கடன் பத்திரங்கள் மீதான வருமானங்களுக்கு வரி விதிக்கப்படும்.
 • வருமான வரித்துறை ஆணையர் மட்டத்தில் நிலுவையில் உள்ள சிறு மதிப்பிலான மேல்முறையீட்டு வழக்குகளின் சுமைகளை குறைக்கும் வகையில் 100 இணை ஆணையர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
 • இந்த ஆண்டு ஏற்கனவே மேல் முறையீட்டு மனுக்கள் மீதான ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 • ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் வாயிலாக அனுப்பப்படும் தொகை மற்றும் கிஃப்ட் சிட்டி நகரத்திற்குள் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்திற்கான வரிப்பயன்கள் 2025 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும்.
 • வருமான வரிச்சட்டம் பிரிவு 276-ஏயின்கீழ் சில நடவடிக்கைகள் ஏப்ரல் 2023 முதல் குற்றமற்றவையாகக் கருதப்படும்.
 • ஐடிபிஐ வங்கி உட்பட நிறுவனங்களின் பங்குவிலக்கல் நடவடிக்கைகளில் ஏற்படும் நஷ்டங்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி.
 • அக்னிவீர் நிதிக்கு முழு விலக்கு அளிக்கப்படும்.
 • மறைமுக வரிகள்: ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி தீர்வை 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பு.
 • பொம்மைகள், சைக்கிள்கள், வாகனங்கள், நாப்தா உள்ளிட்ட சில பொருட்கள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வைகள், செஸ் தீர்வை மற்றும் கூடுதல் வரிகளில் சிறு மாற்றங்கள்.
 • ஜிஎஸ்டி செலுத்திய அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுக்கு கலால் வரியிலிருந்து விலக்கு.
 • மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்_அயன் மின்கலன் உற்பத்திக்கு பயன்படும் மூலதனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கு சுங்கத்தீர்வை விலக்கு. 2024 மார்ச் 31 வரை நீட்டிப்பு.
 • பரிசோதனை மற்றும் சான்றிதழ்களுக்காக குறிப்பிட்ட சில நிறுவனங்களிலிருந்து இதற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், டயர்கள் போன்றவற்றிற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு.
 • செல்போன்களில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் மற்றும் இதர தொடர்புடைய உதிரி பாகங்களுக்கான இறக்குமதி தீர்வை ரத்து செய்யப்படுகிறது. செல்போன்களில் பயனாகும் லித்தியம் அயன் மின்கலன்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்படுகிறது.
 • தொலைக்காட்சி பெட்டி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி தீர்வை 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பு.
 • சமையலறை மின்சார புகைபோக்கி மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு.
 • சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மின்சார புகைபோக்கியின் உற்பத்திக்கு பயன்படும் உஷ்ண சுருள் மீதான அடிப்படை சுங்கவரி 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பு.
 • ரசாயன தொழிலில் பயன்படுத்தப்படும் இயற்கை அல்லாத எத்தில் ஆல்கஹாலுக்கு அடிப்படை சுங்கத்தீர்வையிலிருந்து விலக்கு.
 • அமில அடிப்படையிலான கால்ஷியம் ஃப்ளோரைடு மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 5-லிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பு.
 • ஜவுளி, காகிதம், மை தயாரிப்புக்கு பயன்படும் எபிக்ளோரோஹைடிரின் உற்பத்தி செய்வதற்கு தேவையான கச்சா கிளிசரினுக்கு அடிப்படை சுங்கத்தீர்வை 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பு.
 • இரால் தீவன உள்நாட்டு உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.
 • ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் செயற்கை வைரங்கள் உற்பத்திக்கான அடிப்படை சுங்கத்தீர்வையும் குறைப்பு.
 • தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கத்தீர்வை அதிகரிப்பு.
 • வெள்ளிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு.
 • இரும்பு மற்றும் எஃகு உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது தொடரும்.
 • தாமிரக்கழிவுகளுக்கான 2.5 சதவீத சலுகை அடிப்படையிலான இறக்குமதி தீர்வை தொடர்கிறது.
 • கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி தீர்வை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிப்பு.
 • குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது 16 சதவீதம் பேரிடர் மேலாண்மை வரி விதிக்கப்படுகிறது.
 • சுங்கவரி விதிகளில் சட்டப்பூர்வ மாற்றங்கள்: தீர்வு ஆணையத்தில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பத் தேதியிலிருந்து வழங்கப்படும் 9 மாத கால அவகாசம் எது என வரையறுக்க சுங்கச்சட்டம் 1962-ல் திருத்தம் செய்யப்படும்.
 • சரக்கு குவித்தலுக்கு எதிரான வரி, கூடுதல் சுங்கவரி மீதான சுங்கத் தீர்வைக்கான கட்டண விகிதங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
 • ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் மேல்முறையீடு செய்வதற்கான குறைந்தபட்ச வரித்தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக மாற்றுவதற்கு மத்திய ஜிஎஸ்டி வரிச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கலவை வரியை தற்போதைய 50 முதல் 150 சதவீதத்திலிருந்து 25 முதல் 100 சதவீதமாகக் குறைக்கப்படும். குறிப்பிட்ட சில குற்றச்செயல்கள் குற்றமற்றவையாக மாற்றப்படும்.
 • ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் விற்பனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அதிகபட்ச காலவரம்பு 3 ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்படும்.
 • பதிவு செய்யாத விநியோகஸ்தர்கள் கலவை வரி செலுத்துவோர் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு விநியோகத்தை மின்னணு வர்த்தகர்கள் மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
ஒரு ரூபாயில் வரவு
 • அதன்படி, நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாய்க்கும், 58 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகளிலிருந்து கிடைக்கிறது. ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் 15 காசுகள் பெறப்படுகின்றன. 
 • மத்திய வரிகள் மூலம் 7 பைசா கிடைக்கிறது. கம்பெனிகள் வரிகள் மூலம் 15 பைசா கிடைக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மூலம் 17 பைசா கிடைக்கிறது. 
 • கடன்கள் மற்றும் இதர வருவாய் மூலம் 34 பைசா பெறப்படுகிறது. வரியில்லா வருமானங்கள் மூலம் 6 பைசா கிடைக்கிறது. கடனில்லா முதலீட்டு வருவாய் மூலம் 2 பைசா கிடைக்கின்றன. கலால் வரி மூலம் 4 பைசா கிடைக்கிறது.
ஒரு ரூபாயில் செலவு
 • செலவினத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய செலவினம் வட்டி செலுத்துதல் தான். வட்டி செலுத்துதலுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் 20 பைசா செலவிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரி பகிர்விற்காக 18 பைசா செலவிடப்படுகிறது. 
 • ஒரு ரூபாயில் பென்சன் திட்டங்களுக்காக 4 பைசா செலவிடப்படுகிறது. இதர செலவுகளுக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற இதர பரிமாற்றங்களுக்காக 9 பைசா செலவிடப்படுகிறது. 
 • மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 பைசா செலவிடப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. மானியங்களுக்காக 7 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசா செலவிடப்படுகிறது.
ENGLISH
 • Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the financial year 2023-24 in the Lok Sabha on Wednesday.
 • With Lok Sabha elections due next year, this is the last budget for the entire year under the leadership of Prime Minister Modi.
Highlights of Finance Minister Nirmala Sitharaman's Budget Speech
 • Sabtarishi's priorities in the Union Budget: inclusive growth, reaching the last man, investment and infrastructure, energy and renewables, green growth, youth power, financial sector.
 • Annual per capita income has doubled in the last 9 years to Rs 1.97 lakh.
 • The number of subscribers of the Workers' Provident Fund doubled to 27 crore.
 • We have got the G-20 leadership to give India a special place in the global economy.
 • The growth rate for the current year is estimated to be 7 percent.
 • Prosperous and inclusive growth will be ensured.
 • India's economy has moved from the 10th position to the 5th position in the world in the last 9 years.
 • A unique digital infrastructure of world class will be created.
 • So far it has been ensured that no one should go to bed hungry during the dharma.
 • 220 crore doses of vaccine have been administered to 102 crore people.
 • Priority for the work of providing houses to the public for the next one year under the Prime Minister's Housing Scheme.
 • Indian economy has moved from 10th place to 5th place in last 9 years.
 •  

 • 11.7 crore toilets have been constructed under Swachh India programme. 9.16 crore free cooking gas connection has been provided under Ujjwala scheme.
 • 47.8 Crore Jandan Bank Accounts have been opened. 44.6 crore people have been covered under the Prime Minister's Insurance Scheme.
 • Rs 2.2 lakh crore has been released to 11.4 crore farmers under the Prime Minister's Farmers' Financial Assistance Scheme
 • Encouragement of agricultural start-ups in rural areas.
 • 157 new nursing colleges will be created.
 • By 2047, steps will be taken to eradicate anemia completely.
 • Decentralization of warehouses will be implemented.
 • An allocation of Rs.2,200 crore for providing seed treatment and quality planting materials to promote high value horticulture crops.
 • Urban Infrastructure Development Fund will be created through National Housing Bank to meet existing credit deficit in priority sector to improve urban infrastructure facilities in secondary and tertiary cities.
 • Digi Locker system will be strengthened for MSMEs, large corporations and charitable organizations to share documents online.
 • Decision to set up 100 labs to train 5G technology based app development to increase new industry and employment opportunities.
 • The government has decided to provide necessary assistance to one crore farmers to promote organic farming. For this, 10,000 bio-input resource centers will be set up.
 • 30 Skill India International Centers have been set up in various states to align the skills of the youth to international standards.
 • A central processing center will be created to handle various forms filed under the Companies Act and quickly evaluate them.
 • A fund to accelerate agricultural activities will be created to encourage young entrepreneurs in agri-related industries in rural areas.
 • The Indian Small Grains Research Center at Hyderabad is being supported to make India a global hub for small grains.
 • Rs 20 lakh crore agricultural credit facility for animal husbandry, dairy and fisheries sector.
 • A sub-scheme under the Prime Minister's Aquaculture Scheme has been set up to provide assistance of Rs 6,000 crore to investors, fishermen, fishmongers and small enterprises and to expand the value chain.
 • Creation of a digital public infrastructure for the agriculture sector to provide farmer-focused solutions and encourage agro-tech industry and innovation companies.
 • 63,000 Primary Agricultural Credit Societies will be computerized at a cost of Rs.2,516 crore.
 • Encouragement of public private medical research to promote integrated research and innovation through ICMR laboratories.
 • A new scheme to promote research in the field of pharmaceutical manufacturing.
 • 3rd consecutive increase in capital investment to Rs 10 lakh crore at 33 per cent annually to boost growth rate, generate employment and boost private investment.
 • A people's development program that strives to improve essential government services including health and nutrition. Introduction to 500 localities in the first phase.
 • Encouragement of public private medical research to promote integrated research and innovation through ICMR laboratories.
 • A new scheme to promote research in the field of pharmaceutical manufacturing.
 • 3rd consecutive increase in capital investment to Rs 10 lakh crore at 33 per cent annually to boost growth rate, generate employment and boost private investment.
 • A development plan for developing communities that provides complete coverage of essential government services including health and nutrition. Introduction to 500 localities in the first phase.
 • Allocation of Rs 15,000 crore over the next 3 years for the Prime Minister's Development Scheme for Vulnerable Tribal Peoples, a scheme for the development of hill dwellers.
 • A new Infrastructure Finance Secretariat has been set up to promote private investment in the infrastructure sector.
 • District Education and Training Centers will be set up as vibrant and effective institutions in teacher training.
 • 5,300 crore central government funded Micro Irrigation Development Project.
 • A Bharat Museum of Inscriptions will be set up to showcase the country's culture by digitizing more than one lakh ancient inscriptions.
 • The capital expenditure of the central government will be Rs.13.7 lakh crore.
 • Encouraging states and cities to undertake urban reforms and initiatives to create cities that meet future needs with sustainability.
 • Decision to ensure 100 per cent mechanization in all metros and urban areas to change the status quo of human waste disposal.
 • IGOD Karmayogi, an integrated online training platform, has been launched to provide continuous learning opportunities to lakhs of government employees to improve their skills and adopt a people-oriented approach.
 • More than 39,000 procedures have been abolished and 3,400 statutory provisions have been decriminalized to facilitate trade understanding.
 • The Jan Upham Bill has been tabled in the Lok Sabha to amend 42 central laws to ensure faith-based governance.
 • Introduction of Personal DigiLocker Service, a one-stop solution for making changes and corrections in identity documents including Aadhaar.
 • Government and PSUs will refund 95 per cent of their bond or performance guarantee to micro-contractors who are unable to fulfill their contracts during the pandemic.
 • A program to identify and finance well-served organizations to overcome the problem of under-funding to address development needs.
 • 7,000 crore allocation for setting up third phase electronic courts.
 • Research and Development Funding for Lab Created Diamonds Sector to Reduce Import Dependence
 • A green hydrogen production target of 5 million metric tons annually by 2030 to reduce dependence on fossil fuels and ensure low carbon emissions.
 • Allocation of Rs.35,000 crore to power transmission sector to ensure energy security.
 • Battery energy storage systems to promote the economy on a sustainable growth path.
 • Allocation of Rs 20,700 crore for Ladakh Integrated Renewable Energy Package.
 • Prime Minister - Pranam Scheme will be launched to encourage the State Governments and Union Territories to use alternative fertilisers, balanced chemical fertilisers.
 • The Green Loan Scheme will be announced under the Environment Protection Act.
 • At least 50 tourist attractions will be selected to attract domestic and foreign tourists.
 • Sector-specific training and entrepreneurship development will be undertaken to achieve the 'See Our Country' initiative.
 • Infrastructure projects will be established to promote tourism in the border villages.
 • Integrated commercial hubs will be established in state capitals and major tourist destinations emphasizing that a district is a productive entity.
 • The following steps have been taken to promote business activities at GIFT IFSC.
 • Dual regulation will be avoided by giving powers under the Special Economic Zones Act to the International Financial Services Commission.
 • Single window IT system setup for approval and registration by RBI, SEBI, IRDAI, IFSCA etc.
 • Permitting foreign bank to purchase IFSC bank units.
 • Establishment of Export-Import Bank Branch for trade reinvestment.
 • A National Institute of Education will be set up to learn stock market practices.
 • Integrated IT platform for easy claim of unclaimed shares and unfunded dividend through Investor Education and Protection Fund Commission.
 • Mahila Samman Savings Scheme Certificate, a new small savings scheme that can be invested in one time, will be launched.
 • Mahila Samman Savings Scheme Certificate, a new small savings scheme that can be invested in one time, will be launched. Under this scheme launched on the occasion of Independence Day, up to Rs 2 lakh can be saved as a deposit in the name of girl children for two years. 7.5 percent interest will be paid under this scheme which will be valid till March 2025.
 • Fund allocation for Prime Minister's Housing Scheme will be increased by 66 percent. After the corona pandemic, private investments have started to pick up again in all sectors.
 • The agricultural credit target will be increased to Rs 20 lakh crore.
 • A national digital library will be set up for children and young adults.
 • Capital investment by states will be supported.
 • 100 important transport projects will be implemented.
 • 2.4 Lakh Crore Fund Allocation for Railway Sector Development.
 • Customer identification process KYC will be simplified.
 • 38,800 new teachers and staff will be appointed in 740 Ekalaiva Model Undi Boarding Schools.
 • A consolidated income tax return filing procedure will be established.
 • A project to grow vagrant forests in coastal saline areas called Misti.
 • Amrit Bidhi Project in New Education Policy to make dreams of youth come true.
 • Subsidized training for 47 lakh youths for 3 years under the new Palagunar scheme.
 • A National Financial Registry will be established

 • A law will be brought in for credit management procedures for public infrastructure.
 • Amendments will be made to the existing Banking Act and RBI Act.
 • Full support for digital transactions
 • Digital transactions to increase by 76 percent by 2022 91 percent increase in transaction value.
 • 15 lakhs for senior citizens and the maximum deposit is Rs. 30 lakhs increase.
 • 4.5 lakhs with a monthly income deposit ceiling of Rs. 9 lakhs increase.
 • States are allowed to maintain a deficit of 3.5 percent of GDP. It is allowed to maintain up to 5 percent during the years 2024-26.
 • 5,300 crore special financial assistance to the state of Karnataka
 • 9000 crore package fund for MSMEs.
 • The Savings Scheme for Girls will be implemented till March 2025.
 • 157 new nursing colleges will be established at key locations
 • By 2047, work will begin to eliminate sickle cell anemia. Awareness is being created in the affected tribal areas.
 • The agricultural credit target will be raised to Rs 20 lakh crore with a focus on animal husbandry, dairy and fisheries.
 • Teachers' training should be reformed through innovative pedagogy, continuous professional development and ICT implementation; District educational and training institutions will be developed into vibrant institutions of excellence.
 • Discussions were held on the National Education Policy (NEP2020), educational infrastructure and strategies to increase student enrollment in technology-based learning.
 • Revised estimates: Total revenue excluding loans Rs 24.3 lakh crore. Out of which the net tax revenue is Rs.20.9 lakh crore. The overall expenditure is Rs 41.9 lakh crore. Out of which the capital expenditure is Rs.7.3 lakh crore. Fiscal deficit is 6.4 percent of gross domestic product.
 • Budget Estimates: Total revenue excluding loans is Rs 27.2 lakh crore. The total expenditure is Rs.45 lakh crore. Net tax revenue is Rs.23.3 lakh crore. Fiscal deficit is 5.9 percent of gross domestic product. 11.8 lakh crore in borrowings through equity securities. Overall market lending is estimated at Rs 15.4 lakh crore.
 • Direct Taxes: Notifications regarding direct taxes are issued with a view to continuity and consistency in taxation. Simplification and streamlining of taxation to reduce compliance burden and tax relief to encourage entrepreneurship among people.
 • The Income Tax Department is constantly striving to transform services for taxpayers with ease of compliance and smoothness.
 • To further improve services for taxpayers, the next generation General Income Tax Return Filing Form is being introduced.
 • Under the new income tax scheme Rs. No income tax for individual with annual income up to 7 lakhs. Earlier it was Rs.5 lakh.
 • Under the new income tax scheme introduced in 2020, there were 6 income brackets. These have now been reduced to 5. Its description:
 • Rs. No tax up to 3 lakhs
 • Rs. 5 percent up to 3-6 lakhs
 • Rs. 6-9 lakhs and 10 percent
 • Rs. 9-12 lakhs and 15 percent
 • Rs. 20 percent up to 12-15 lakhs
 • Rs. 30 percent above 15 lakhs
 • Introduction of fixed deduction of Rs.50,000 for salaried individuals under the new Personal Income Tax scheme. Rs.15,000 deduction introduced for family pensioners.
 • Reduction of maximum additional tax rate from 37 percent to 25 percent. The top income tax rate for an individual is reduced to 39 percent from the existing rate.
 • Increase in tax exemption limit on encashment of leave to Rs.25 lakhs for salaried employees in non-govt.
 • Generally the new income tax system is optional. But aspirants should opt for old income tax system and declare.
 • Small companies and some professionals can benefit from increasing the ceiling on presumptive tax payments.
 • If purchases are made in MSMEs and payment is made on time, it will be treated as expenditure.
 • The minimum tax rate of 15 per cent provided to manufacturing companies will also be applicable till March 2024 for co-operatives starting production activities.
 • Co-operative sugar mills are allowed to show as expenditure the amount paid to sugarcane farmers prior to assessment year 201_17. This will provide relief of around Rs.10,000 crore.
 • The section provides ceiling up to Rs 2 lakh as cash deposit per co-operative society member and cash repayment of up to Rs 2 lakh in loans taken from Primary Agricultural Co-operative Societies and Primary Co-operative Agricultural and Rural Development Banks.
 • The tax deductible ceiling for cash withdrawals in co-operative societies has been fixed at Rs 3 crore.
 • Extension of income tax concessions to new industrial establishments till March 2024.
 • Extension of period for industrial companies to recover their losses from 7 years to 10 years.
 • Exemption from investment gains for residences under section 54 and section 54-F, ceiling fixed at Rs.10 crore.
 • Allowance of tax deduction up to Rs.5 lakh on premium paid after April 1, 2023 for high value policies.
 • Exemption of income of Central State Governments' Commissions and Boards regulating development and housing schemes of metropolitan, urban and rural areas.
 • The minimum income tax deduction amount for online games has been fixed at Rs.10,000.
 • Reduction of income tax deduction from 30 per cent to 20 per cent for those without PAN card while withdrawing workers' provident fund.
 • Income on market linked debt securities is taxable.
 • 100 Associate Commissioners will be recruited to reduce the burden of small value appellate cases pending at Commissioner level of Income Tax.
 • This year the number of investigations on appeals has already increased.
 • The tax benefits for remittances through IFSC codes and intra-city gift transfers will be extended till March 2025.
 • Certain activities under Section 276-A of the Income Tax Act will be decriminalized from April 2023.
 • Allowance of carry-forward of losses incurred on divestment operations by companies including IDBI Bank.
 • Agniveer Fund will be fully exempted.
 • Indirect Taxes: Reduction of basic import duty on goods other than textiles and agricultural products from 21 percent to 13 percent.
 • Minor changes in basic customs duties, cess levy and additional duties on certain products including toys, bicycles, vehicles, naphtha.
 • Exemption from excise duty on GST paid compressed biogas.
 • Exemption from customs duties on capital goods and machinery used in the production of lithium-ion batteries used in electric vehicles. Extension till 31 March 2024.
 • Exemption from customs duty subject to conditions for vehicles, auto spare parts, tires etc. imported for this purpose from certain companies for inspection and certification.
 • Import duty on camera lens and other related spare parts used in cell phones is waived. Tax exemption for lithium-ion batteries used in cell phones is extended for another year.
 • Reduction of import duty on TV set spare parts from 5 percent to 2.5 percent.
 • Increase in basic duty on kitchen electric chimney from 7.5 percent to 15 percent.
 • Reduction in basic duty on heating coils used in the manufacture of electric chimneys used in kitchens from 20 per cent to 15 per cent.
 • Exemption from basic customs duty for non-natural ethyl alcohol used in chemical industry.
 • Reduction of basic duty on acid-based calcium fluoride from 5 to 2.5 percent.
 • Reduction in basic duty from 7.5 per cent to 2.5 per cent on crude glycerine required for production of epichlorohydrin used in textile, paper and ink production.
 • Reduction of levy on raw materials required for domestic production of lobster feed.
 • A reduction in basic customs duties on the production of synthetic diamonds made in laboratories.
 • Increase in customs duty on jewelery made of gold and platinum.
 • Increase in import duty on silver.
 • Exemption from import duty on raw materials for iron and steel production will continue.
 • Continuation of 2.5 percent concessional import levy on copper scrap.
 • Increase in basic import duty on compound rubber from 10 percent to 25 percent.
 • 16 percent Disaster Management Tax is levied on certain cigarettes.
 • STATUTORY CHANGES IN CUSTOMS RULES: The Customs Act, 1962 will be amended to define a period of 9 months from the date of application for passing final order to the Settlement Commission.
 • Adequate revisions will be made in rates of duty for customs duty on anti-stockpiling duty, additional duty.
 • Amendments will be made to the Central GST Act to change the minimum amount of tax for filing an appeal under the GST Act from Rs.1 crore to Rs.2 crore. The composition tax will be reduced from the current 50 to 150 percent to 25 to 100 percent. Certain offenses may be decriminalized.
 • Maximum period for filing sales return under GST Act is restricted to 3 years.
 • Unregistered distributors are allowed to carry out inter-state supply of goods to mixed taxpayers through e-traders.
Income in One Rupees
 • Accordingly, for every rupee of the country's revenue, 58 paisa is derived from direct and indirect taxes. 15 paise is collected from income tax on every rupee.
 • 7 paise is available through central taxes. 15 paisa available through companies taxes. 17 paisa comes from Goods and Services Tax (GST).
 • 34 paise is received from loans and other revenue. 6 paisa available from tax-free income. 2 paise is available from debt-free investment income. 4 paise is earned through excise duty.
Expenditure in One Rupee
 • In terms of expenses, the biggest expense is interest payments. 20 paise for every rupee is spent on interest payments. After that 18 paise is spent on tax sharing by the states.
 • 4 paise is spent on pension schemes out of every rupee. 8 paise is spent on miscellaneous expenses. 9 paise is spent on finance commission and other miscellaneous transactions.
 • 17 paise is spent on central government schemes. 8 paise is spent on defence. 7 paise is spent on grants. 9 paisa is spent on projects run through the financial assistance of the central government.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel