Type Here to Get Search Results !

7th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


7th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவி தொகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
  • வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கல்வி உதவித் தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 141 மாணவ, மாணவியர்களுக்கு எச்டிஎப்சி வங்கியின் சார்பில் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 
  • அதனைத் தொடர்ந்து, இந்த வருடமும் மருத்துவம், பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை போன்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் 120 மாணவ, மாணவியர்களுக்கு 39 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 மாணவ, மாணவியர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு வீட்டுவசதி மற்றும் துறையின் செயலாளர் செல்வி அபூர்வா, துறையின் இயக்குநர் கோவிந்த ராவ், எச்.டி.எப்.சி வங்கியின் தமிழ்நாடு தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ் வங்குரி, வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் நிர்மல்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2023
  • கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 30 தொடங்கிய இந்த் தொடர் பிப்ரவரி 11 வரை நடைபெற இருக்கிறது .
  • இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 5,000 மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
  • இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் 2018 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கப்பட்டது.
  • இதில் தடகளம், கபடி, ஹாக்கி கைப்பந்து, கோகோ, யோகாசனா உள்ளிட்ட 27 விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளது.
  • ஏழாவது நாள் முடிவின் படி, பதக்கப் பட்டியலில் 83 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது .
  • தமிழ்நாடு அணி 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது. Medal Tally
  • 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் உரி மனோகர் தங்கம் வென்றார். இதற்கு முன் 100 மீட்டர் ஓட்டைப்பந்தயத்தில் இவர் தமிழ்நாடு அணிக்காக வெண்கலம் வென்றிருந்தார். மேலும் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் (Hurdles) ரத்தீஷ் பாண்டிதுரை தங்கம் வென்றார்.
  • தடகள பிரிவு ட்ரிபிள் ஜம்ப் விளையாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த அபிநயா ஸ்ரீ 12.05 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். இதுவரை தடகள விளையாட்டில் மட்டும் நான்கு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணி அசத்தியுள்ளது. பிப்ரவரி 2- ஆம் தேதி நடைபெற்ற யோகாசனா விளையாட்டில் தமிழ்நாட்டிற்கு முதல் தங்கம் கிடைத்தது.
  • யோகாசனாவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் தமிழ்நாட்டிற்குக்கு கிடைத்திருக்கிறது.
  • சைக்கிளிங் விளையாட்டிலும் தமிழக வீரர்கள் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் வென்றுள்ளனர். மேலும் குத்து சண்டை விளையாட்டில் ஒரு வெண்கலம் பெற்றுள்ளனர். பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
டிஜிட்டல் (மின்னணு) தடயஅறிவியல் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகமும், தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • டிஜிட்டல் (மின்னணு) தடயஅறிவியல் ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகமும், தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. 
  • மேலும், இது தொடர்பான அறிவுசார் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. 
  • இந்த ஒப்பந்தத்தில், சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு முதன்மை தலைமை இயக்குநர் சுர்ஜித் புஜபால் மற்றும் தேசிய தடயஅறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜே எம் வியாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  
  • வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் அமலாக்கத் துறையினருக்கு தேவைப்படும் புலனாய்வு தகவல்களையும் வழங்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் தடயஅறிவியல் புலனாய்வு சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்களை இணைந்து மேற்கொள்வதோடு, ஒருவருக்கொருவர் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel