உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல்
- உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை சேர்த்து அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34.
- ஆனால், தற்போது 27 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் இயங்குகிறது. நீதிபதிகள் பற்றாக்குறையால் ஏராளமான வழக்குகளை விசாரிக்க முடியவில்லை.
- இந்நிலையில் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி பரிந்துரை செய்தது.
- அதன்பின் கடந்த ஜனவரி 31-ம் தேதி அலகபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
- ஆனால் கடந்த 2 மாதங்களாக உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை நியமிக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது.
- சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையின்போது, கொலீஜியம் பரிந்துரைகளின் நிலவரம் பற்றி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ் ஓகா ஆகியோர் கேட்டனர்.
- இதையடுத்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் நியமனத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. அதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து 5 பேரும் நீதிபதிகளாக பதவி ஏற்பர்.
- சூரிய குடும்பத்தில் இதுவரை அதிக நிலாக்கள் சனி கிரகத்தில் தான் இருந்தன. அங்கு 83 நிலாக்கள் உண்டு. தற்போது வியாழன் கிரகத்தில் புதிதாக 12 நிலாக்கள் இருப்பதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
- இதனால் 80 நிலாக்கள் கொண்ட வியாழனில் தற்போது 92 நிலாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலாக்கள் கொண்ட கிரகமாக வியாழன் முதல் இடம் பிடித்து உள்ளது.
- இதுவரை முதல் இடத்தில் இருந்த சனி தற்போது 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச வானியல் ஒன்றியத்தின் கார்னகி மையத்தை சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஸ்காட் ஷெப்பர்ட் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
- செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'இலக்கிய மலர் 2023' என்ற சிறப்பு மலரினை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
- அந்த மலரின், முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
- தேசிய அனல் மின்சாரக் கழகம் சார்பில், கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு குறித்த ஜி20 சர்வதேசக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஜி 20 நாடுகளின் தலைமைத்துவத்தை 2022 டிசம்பர் 1ம் தேதி இந்தியா ஏற்றுள்ளது. இந்த தலைமைப் பொறுப்பை இந்தியா ஓராண்டு காலம் வகிக்க உள்ளது. இதையொட்டி, மின்சாரப் பகிர்மானம் சார்ந்த பணிக்குழுக் கூட்டம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
- இதன் ஒருபகுதியாக, மத்திய அரசின் மின்துறை சார்பில், இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சாரக் கழகமான, என்டிபிசி கருத்தரங்கை நடத்துகிறது.
- பெங்களூருவின் டெஜ் வெஸ்டென்டில் 5ம் தேதி கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு குறித்த இந்த சர்வதேசக் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
- இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிற் பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
- தூய்மை ஆற்றல் பகிர்வு என்ற இலக்கை அடைவதில், கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த அம்சங்களை இந்தக் கருத்தரங்கம் முன்னிறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.