மெட்ரோ ரயில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து
- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2, வழித்தடம் 4-ல் (பவர்ஹவுஸ் ஸ்டேஷன் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை) 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அதற்கு இடையில் உள்ள வழித்தடங்கள் மற்றும் பூந்தமல்லி பணிமனை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு மற்றும் காற்றோட்டம் சீரமைப்பு பணிகளை வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல் போன்ற அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் வோல்டாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தமானது.
- இந்தப் ஒப்பந்தம் பூந்தமல்லி பணிமனை மற்றும் வழித்தடம் 4-ல் உள்ள 18 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களுக்கான மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளை உள்ளடக்கியது.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் வோல்டாஸ் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி தலைவர் ஜெயந்த் தேஷ்பாண்டே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணைய நிறுவனம் (செயில்), இது வரை இல்லாத வகையில் மாதாந்தர உற்பத்தி அளவாக ஜனவரி 2023-ல் மிக அதிக உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.
- ஜனவரி 2023-ல், இந்த நிறுவனம் 1.72 மில்லியன் டன் கச்சா எஃகு உற்பத்தியை செய்துள்ளது. கடந்த மார்ச் 2022-ல் இந்நிறுவனம் எட்டிய மிகச் சிறந்த சாதனையைவிட இது அதிகமாகும்.
- ஹாட் மெட்டல் மற்றும் விற்பனைக்கால எஃகு ஆகியவற்றின் உற்பத்தியும் ஜனவரி மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவாக முறையே 1.8 மில்லியன் டன் மற்றும் 1.6 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதுவும் மார்ச் 2022 உற்பத்தியைவிட சிறந்த வளர்ச்சியாகும்.
- இந்திய குத்துச்சண்டை வீரர்களின் உயர்மட்ட செயல் திறன்களால் 36,300 ரேங்கிங் புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. கஜகஸ்தான் 48,100 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உஸ்பெகிஸ்தான் 37,600 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
- பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
- குத்துச்சண்டையில் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா 4வது இடத்தையும், கியூபா 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.